கெட்டவார்த்தைகளை பேசித்தான் கதாநாயாகி ஆனேன்! அதிர்ச்சியடைந்து விட்டீர்களா???

கெட்டவார்த்தைகளை பேசித்தான் கதாநாயாகி ஆனேன்! அதிர்ச்சியடைந்து விட்டீர்களா???
  • PublishedMay 24, 2023

‘வட­சென்னை’ படத்­திற்கான  தேர்­வில் பங்­கேற்­ற­போது அதன்  இயக்­கு­நர் வெற்­றி­மா­றன் தம்மை கெட்ட வார்த்­தை­கள் பேசி நடிக்­கச் சொன்­ன­தாக ஐஸ்­வர்யா ராஜேஷ் கூறி­யுள்­ளார்.

மேலும்“தெரிவின்போது எனக்­குத் தெரிந்த அனைத்து கெட்ட வார்த்தை­க­ளை­யும் பேசு­மாறு   இயக்­கு­நர் வெற்­றி­மா­றன் கூறியதாகவும் அதைக் கேட்­ட­போது தான் அதிர்ச்­சி­யடைந்ததாகவும் கூறியுள்ளார்.

நான் எப்­படி கெட்ட வார்த்­தை­க­ளைப் பேசி நடிக்க முடி­யும் என்று அவ­ரி­டம் கேட்­டபோது, சிரித்­துக் கொண்டே, ‘முத­லில் நீ பேசும்மா’ என்­றார்.

வேறு வழி­யின்றி துணிச்­சலை வர­வ­ழைத்­துக்கொண்டு எனக்­குத் தெரிந்த அனைத்து கெட்ட வார்த்தை­க­ளை­யும் பேசினேன்

நான் கெட்ட வார்த்­தை­களை உச்­ச­ரித்த விதம் இயக்­கு­ந­ருக்­குப் பிடித்­துப் போன­தாம், அத­னால்­ தான் எனக்கு அவரது இயக்கத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்­தது என்று அண்­மைய பேட்­டி ­ஒன்றில் குறிப்­பிட்­டுள்­ளார்.

மேலும் “நீதான் இந்­தப் படத்­தின் கதா­நா­யகி” என்று அவர் தெரி­வித்­த­போது, நான் மகிழ்ச்­சி­யில் திக்­கு­முக்­கா­டிப் போனேன்  என்றார்.

‘வட­சென்னை’ படத்­தின் படப்­பி­டிப்­பின்­போது ஏற்படும் சந்தே­கங்­கள்  குறித்து அவ­ரி­டம் எந்த தயக்கமும் இன்றி அவரிடம் பேசமுடியும். ஓரிரு நிமி­டங்­கள் அவருடன் பேசி­னாலே தெளி­வாகி விடு­வோம். அந்த அள­வுக்கு சுறு­சு­றுப்­பாகச் சிந்தித்து செயல்­படக்கூடியவர்.

ஒரு படத்­துக்­காக உழைக்­கும் கடைக்­கோடி தொழி­லா­ளி­கள் வரை அனை­வருக்­கும் உரிய மரி­யாதை கொடுப்­பார் அவ­ரது இயக்­கத்­தில் தொடர்ந்து நடிக்க வேண்­டும் என்று எல்­லாரும் விரும்­பு­வ­தற்கு இது­தான் கார­ணம்,” என்­கி­றார் ஐஸ்­வர்யா ராஜேஸ்.

தொடர்ந்து நாய­கி­களை முன்­னி­லைப்ப­டுத்­தும் படங்­களில் தான் நடிக்க விரும்­பு­வ­தா­க ஐஸ்­வர்யா கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *