தொடர் பிரச்சினையால் துவண்டுபோன நயன்தாரா : ஜோசியரிடம் சரணடைந்த பரிதாபம்!

தொடர் பிரச்சினையால் துவண்டுபோன நயன்தாரா : ஜோசியரிடம் சரணடைந்த பரிதாபம்!
  • PublishedMay 24, 2023

நயன்தாரா கிட்டத்தட்ட சினிமாவிற்கு வந்து 20 வருடங்கள் ஆகியும் தற்போது வரை முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.

இந்நிலையில், தான் காதலித்து வந்த விக்னேஷ் சிவனை திருமணம் செய்துக்கொண்டார். இதனையடுத்து அவருடைய கெரியரில் சற்று சரிவு ஏற்பட்டுள்ளது. தற்போது வேறு எந்த படத்திலும் கமிட்டாகாத நிலையில், ஜவான் படத்தைதான் நம்பியிருக்கிறார்.

அந்த படமும் ரிலீஸ் ஆகாமல் இழுப்பறியில் தான் இருக்கிறது. இப்படி ஒவ்வொரு பிரச்சினையாக வந்துக்கொண்டிருக்கிறது.   அதற்கு என்ன பரிகாரம் செய்வதென்று யோசித்து அதற்கேற்ற மாதிரி குலதெய்வ கோவிலிலும் வழிபாடு பூஜை செய்து வந்திருந்தார். எதுவும் பலன் கொடுக்கவில்லை என்றுதான் சொல்லவேண்டும்.

இந்நிலையில்,  இதற்கெல்லாம் தீர்வாக இவர் எடுத்த முடிவு தான் ஜோசியம். இவருடைய ஆஸ்தான ஜோசியரை சந்தித்து பிரச்சனைக்கான தீர்வை அடைய சென்று இருக்கிறார்.

ஆனால் அங்க போன நயன்தாராவுக்கு ஷாக் கொடுக்கிற அளவுக்கு ஒரு விஷயத்தை சொல்லிவிட்டார். அதாவது எல்லா பிரச்சனைக்கும் காரணம் உங்களுடைய பெயர் தான். பெயர் ராசி சரியில்லாததால் எல்லா பிரச்சனைக்கும் குழப்பம்.

அதனால் உங்கள் பெயரை மாற்றிக் கொண்டால் எல்லாமே சரியாகிவிடும் என்று சொல்லி இருக்கிறார் இதை கேட்ட நயன்தாரா அது எப்படி பெயரை மாற்றினால் நேரம் சரியாகிவிடும் என்ற சந்தேகத்தில் யோசித்து வருகிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *