அந்த நடிகைதான் வேண்டும் – விடாபிடியாய் இருக்கும் சிம்பு!

அந்த நடிகைதான் வேண்டும் – விடாபிடியாய் இருக்கும் சிம்பு!
  • PublishedMay 24, 2023

சிம்பு கடந்த இரண்டு வருடங்களாக வெற்றி நாயகனாக வாகை சூடி வருகிறார். இவர் கடைசியாக நடித்து வெளிவந்த பத்து தல படம் இவருக்கு வெற்றியை கொடுக்கும் வகையில் அமைந்தது.

இதனை அடுத்து இவருடைய அடுத்த படமான 48வது படத்தை இயக்குனர் தேசிங்கு பெரியசாமி இயக்கி கமல் தயாரிக்கப் போகிறார். இந்த படம் குறித்த அப்டேட்டுக்கள் விரைவில் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், முதலில் இந்த படத்தில் தீபிகா படுகோனேவை ஹீரோயினாக நடிக்க வைப்பதற்கு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அவர் அதிகளவு சம்பளம் கேட்டதால் அவருக்கு பதில், கீர்த்தி சுரேஷிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

இதனை அறிந்துக்கொண்ட சிம்பு, தனக்கு பொலிவுட் ஹீரோயின் தான் வேண்டும் எனக் கூறி பிடிவாதமாக இருக்கிறாராம். ஆகையால் தற்போது பொலிவுட்டில் லோ பட்ஜெட்டில் நடிபவர்களை படக்குழு தேடி வருகிறதாம்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *