விக்ரமுக்கு உதவிய அஜித்குமார்!! பல வருடங்கள் கழித்து வைரலாகும் சம்பவம்

விக்ரமுக்கு உதவிய அஜித்குமார்!! பல வருடங்கள் கழித்து வைரலாகும் சம்பவம்
  • PublishedMay 24, 2023

நடிகர் விக்ரமுக்கு அஜித்குமார் உதவிய சம்பவம் அவரது ரசிகர்களை நெகிழ்ச்சியடைய செய்துள்ளது. சினிமாவில் ஏகப்பட்ட கஷ்டங்களை கடந்தவர் நடிகர் விக்ரம். ஆரம்பத்தில் இவர் நடித்த படங்கள் சரியாக ஓடவில்லை. இருப்பினும் சினிமாவை விட்டு ஒதுங்க விருப்பமில்லாத நிலையில் பிற ஹீரோக்களுக்கு டப்பிங் கொடுத்தது வந்தார்.

பின்னர் பாலாவின் முதல் படமான சேதுவில் நடித்தார். சேது மிகப்பெரிய வெற்றிப்படமானது. படத்தின் வெற்றிக்கு பிறகு விக்ரமுக்கு பட வாய்ப்புகள் குவிந்தன. இருப்பினும் எல்லா கதைகளிலும் நடிக்காமல் தன்னை நிரூபிக்கும் வகையில் உருவான காசி, பிதாமகன் ஜெமினி, தூள், தில் போன்ற படங்களைத் தேர்ந்தெடுத்து நடித்தார். இப்போது தமிழ் சினிமாவின் சிறந்த நடிகர்களில் ஒருவராக இருக்கிறார்.

சினிமாவில் தீவிரமாக போராடிய விக்ரம் ஒருமுறை விபத்தில் சிக்கி படுத்த படுக்கையானார். அந்த சமயத்தில் விக்ரமால் இனி நடமாடவே முடியாது என்ற தகவலை நடிகர் தியாகராஜன் வெளியிட்டார் எனக்கூறப்படுகிறது.

விக்ரமின் தாயும், நடிகர் பிரசாந்த்தின் தந்தையான தியாகராஜனும் உடன் பிறந்தவர்கள் இருப்பினும் விக்ரம் சினிமாவுக்குள் நுழைந்தபோது அவருக்கு பிரசாந்த்தோ, தியாகராஜனோ பெரிதாக உதவவில்லை.

இந்தச் சூழல் நிலையில் 1997ஆம் ஆண்டு ஜேடி & ஜெர்ரி உல்லாசம் கதையோடு அஜித்தை அணுகியிருக்கிறார்கள். அப்போது படத்தில் இன்னொருவர் நடிக்க வேண்டும். கொஞ்சம் முக்கியத்துவம் உள்ள கேரக்டர்தான் எனவும், அதில் விக்ரமை நடிக்க வைக்க முடிவு செய்திருப்பதாகவும் அஜித்திடம் கூறியிருக்கிறார்கள்.

அதனைக் கேட்ட அஜித்குமார் அவரையே நடிக்க வையுங்கள். அவருக்கு ஸ்க்ரீன் ஸ்பேஸையும் அதிகப்படுத்துங்கள் என்றாராம்.

இதனை கேள்விப்பட்ட விக்ரம் ஷூட்டிங் ஸ்பாட்டில் அஜித்திடம், நெகிழ்ச்சியுடன் பேசியிருக்கிறார். அதற்கு அஜித் சினிமாவில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் . நாளை நீங்கள் என்னைவிட பெரிய ஹீரோவாகவும் மாறலாம் என வாழ்த்தியிருக்கிறார்.

இப்போது விக்ரம் தமிழ் சினிமாவின் சிறந்த நடிகர்களில் ஒருவராக திகழ்கிறார். அவரது மகன் துருவ் விக்ரமும் சினிமாவில் தற்போது நடித்துவருகிறார். விக்ரம் தற்போது பா.இரஞ்சித் இயக்கத்தில் தங்கலான் என்ற படத்தில் நடித்துவருகிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *