தன்னுடைய கடைசி ஆசையாக தங்கையிடம் முக்கியமான விடயத்தை கூறிய சரத் பாபு!

தன்னுடைய கடைசி ஆசையாக தங்கையிடம் முக்கியமான விடயத்தை கூறிய சரத் பாபு!
  • PublishedMay 24, 2023

அண்மைக்காலமாகவே திரை பிரபலங்களின் மரண செய்தி ஒட்டுமொத்தமாக அனைவரையும் உலுக்கி எடுத்து வருகிறது. சமீபத்தில்தான் மனோபால இறந்திருந்தார். அவரைத் தொடர்நது தற்போது சரத் பாபுவும் உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில், அவருடை கடைசி ஆசை குறித்த தகவல் ஒன்று அனைவரையும் கண்கலங்கச் செய்துள்ளது.  அதாவது இவருடைய உடல் நிலை மோசமாக மாற ஆரம்பித்த பொழுதே சரத்பாபு தன் சகோதரியிடம் ஒரு சத்தியத்தை கேட்டு வாங்கி இருக்கிறார்.

நான் இறந்த பிறகு என்னுடைய இறுதி சடங்கு தமிழ்நாட்டில் தான் நடைபெற வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டாராம். ஆந்திராவில் பிறந்து வளர்ந்த சரத்பாபு தன்னுடைய கடைசி காலத்தை ஹைதராபாத்தில் தான் கழித்து வந்தார்.

அது மட்டுமின்றி தெலுங்கு திரை உலகிலும் இவர் புகழ்பெற்ற ஒரு நடிகராகவும் இருந்தார். அப்படி இருக்கும் இவர் எதற்காக தமிழ்நாட்டில் தனக்கான இறுதி காரியங்கள் நடைபெற வேண்டும் என்று கேட்டுக் கொண்டார் என்பது பலருக்கும் ஆச்சரியமாக இருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *