லைக்காவை தொடர்ந்து சிக்கலில் இருக்கும் ரெட் ஜெய்ண்ட் நிறுவனம்!

லைக்காவை தொடர்ந்து சிக்கலில் இருக்கும் ரெட் ஜெய்ண்ட் நிறுவனம்!
  • PublishedMay 24, 2023

பெரிய பட்ஜெட் படங்களை லைக்கா நிறுவனர் சுபாஸ்கரன் தயாரித்து வருகிறார். ஆனால் தற்போது அமலாக்கத்துறையினரின் சோதனையால் லைக்கா நிறுவனம் சிக்கலில் உள்ளது. இதனால் புதிய படங்களை தொடங்க முடியாமல் இருக்கிறது.

இந்நிலையில் தமிழ் சினிமாவில் லைக்கா ஆணித்தரமாக கால் பதிக்க மற்றொரு காரணம் உதயநிதி தான். ஏனென்றால் ரெட் ஜெயண்ட் நிறுவனத்துடன் இணைந்து லைக்கா பல படங்களை தயாரித்து வருகிறது.

மேலும் லைக்கா தயாரிக்கும் படங்களை உதயநிதி தான் தமிழ்நாட்டில் விநியோகம் செய்து வருகிறார். இதன் மூலம் இவர்களுக்குள் கொடுக்கல் வாங்கல் நிறைய போய்க் கொண்டிருக்கிறது.

இப்போது லைக்காவிடமிருந்து ரெட் ஜெயண்ட் நிறுவனத்தைப் பற்றி பல தகவல்களை அமலாக்க துறையினர் வாங்கியுள்ளனராம். ஆகையால் ரெட் ஜெயண்ட் நிறுவனமும் இப்போது பல பிரச்சனையில் சிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *