ஆஸ்கார் விருதினை வென்ற அவதார்-2 திரைப்படம்!

ஆஸ்கார் விருதினை வென்ற அவதார்-2 திரைப்படம்!
  • PublishedMarch 13, 2023

சிறந்த விஷுவல் எஃபெக்ட்ஸ் ஆஸ்கர் விருதை அவதார் 2 திரைப்படம் வென்றது.

அமெரிக்காவின் ஹாலிவுட்டில் உள்ள டால்பி தியேட்டரில் இன்று 95-வது ஆஸ்கர் விருது வழங்கும் நிகழ்வு தொடங்கியது.

இந்நிலையில் சிறந்த விஷுவல் எஃபெக்ட்ஸுக்கான விருதை ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் வெளியான அவதார் 2 வென்றுள்ளது.

முன்னதாக, சிறந்த ஆவணக் குறுப்படத்துக்கான விருதை இந்தியாவின் தி எலிஃபன்ட் விஸ்பரர்ஸ் வென்று சாதனை படைத்துள்ளது. அதேபோல் ரஜமௌலி இயக்கத்தில் உருவான ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலிற்கும் ஆஸ்கார் விருது கிடைக்கப் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *