அஜித்தின் படவாய்ப்பை தூக்கியெறிந்த அசின்!

அஜித்தின் படவாய்ப்பை தூக்கியெறிந்த அசின்!
  • PublishedMarch 13, 2023

நடிகை அசின் பில்லா படத்திற்காக எடுத்த போட்டோ சூட் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

தனது 15 வயதில் மலையாள படத்தில் முதல் முதலாக நடிக்க ஆரம்பித்த நடிகை அசின் அதன் பிறகு தமிழ், தெலுங்கு, ஹிந்தி என 25 படங்களில் கதாநாயகியாக நடித்திருக்கிறார்.

அதிலும் இவருடைய நடிப்பில் வெளியான எம். குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி, கஜினி, வரலாறு, போக்கிரி, தசாவதம் போன்ற படங்களில் இளசுகளை வெகுவாகக் கவர்ந்து, 90ஸ் கிட்ஸ்களில் எவர்கிரீன் கதாநாயகியாக வலம் வந்தார்.

இந்நிலையில் அசின் அஜித்தின் சூப்பர் ஹிட் படத்தில் கமிட் ஆகி அதற்காக போட்டோஷூட் எல்லாம் நடத்தியுள்ளார்.

கடைசியில் அந்தப் படத்தில் ஒரு காட்சியில் கவர்ச்சியான நீச்சல் உடையில் வரவேண்டும் என்று சொல்லி இருக்கின்றனர். உடனே அந்தப் படத்தை வேண்டாம் என தூக்கி எறிந்து விட்டாராம்.

ஆனால் அசின் அந்த படத்திற்காக எடுத்த போட்டோஷூட் புகைப்படங்கள் அனைத்தும் தற்போது ட்ரண்ட் ஆகி கொண்டிருக்கிறது.  2007-ல் வெளிவந்த பில்லா திரைப்படம் அஜித்திற்கு முக்கியமான திரைப்படம். இந்த படத்தில் நயன்தாரா பிகினி டிரஸ்ஸில் நடித்து பட்டையை கிளப்பி இருப்பார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *