இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜின் டுவிட்டர் பக்கம் முடக்கம்!

இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜின் டுவிட்டர் பக்கம் முடக்கம்!
  • PublishedMarch 13, 2023

இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜின் டுவிட்டர் பக்கம் முடக்கப்பட்டுள்ளது. கடந்த 2 நாட்களாக அவரது ருவிட்டர் பக்கம் முக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அவர் தனது முகநூலில், வணக்கம் நண்பர்களே, கடந்த இரண்டு நாட்களாக எனது ட்விட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டுள்ளது.

சரி செய்தவுடன் திரும்ப வருவேன். இந்த நாள் இனிய நாளாகட்டும் என பதிவிட்டுள்ளார். இது அவரது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் சினிமாவின் பிரபல இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ். 2001ஆம் ஆண்டு வெளியான மின்னலே படத்தின் மூலம் அறிமுகமான இவர் பல வெற்றிப் படங்களுக்கு இசையமைத்துள்ளார். கௌதம் மேனன் இயக்கத்தில் உருவாகிக்கொண்டிருக்கும் ‘துருவ நட்சத்திரம்’ படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ்தான் இசை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *