தினமும் பாத்ரூமில் சாப்பிடும் பிரியங்கா சோப்ரா : இப்படி ஒரு காரணமா?

தினமும் பாத்ரூமில் சாப்பிடும் பிரியங்கா சோப்ரா : இப்படி ஒரு காரணமா?
  • PublishedMay 3, 2023

தமிழன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை பிரியங்கா சோப்ரா, பின்னர் பொலிவுட்டில் முன்னணி நடிகையாக உயர்ந்தார்.

இந்த வளர்ச்சி அவருக்கு ஹாலிவுட் வரை கொண்டுச்சென்றது. இந்நிலையில், பிரபல ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ள அவர், தனது பள்ளிக் கால வாழ்க்கையை பகிர்ந்துள்ளார்.

அவர் கூறிய தகவல்கள் தற்போது வைரலாகி வருகிறது. அதாவது, பிரியங்கா சோப்ரா,  கல்லூரி காலத்தில் அமெரிக்கா சென்றிருந்தாராம். அப்போது மிகுந்த பயந்த சுபாவம் கொண்டவராக இருந்துள்ளார்.

இதனால் யாரிடமும் அதிகம் பேசவும் மாட்டாராம். மேலும் யாரும் பார்க்காதபடி உணவு தின்பண்டங்களை வாங்கிக் கொண்டு பாத்ரூமில் சாப்பிடுவாராம். அதன் பிறகு கிளாஸ் ரூமுக்கு வந்து அமர்ந்து கொள்வாராம்

இவ்வாறு நாட்கள் செல்ல சில நாட்களுக்குப் பின்பு எல்லோரையும் உற்று கவனிக்க ஆரம்பித்தாராம். அதன் பின்பு அவர்களை நண்பர்கள் ஆக்கிக் கொண்டு தன்னுடைய பயத்தை ஒதுக்கினாராம். ஆகையால் இப்போது இவ்வளவு பெரிய நடிகையாக பிரியங்கா சோப்ராவால் ஜொலிக்க முடிகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *