வெளியீட்டிற்கு முன்னரே வியாபாரத்தில் களைக்கட்டிய கங்குவா!

வெளியீட்டிற்கு முன்னரே வியாபாரத்தில் களைக்கட்டிய  கங்குவா!
  • PublishedMay 3, 2023

சூர்யா நடிப்பில் 10 மொழிகளில் உருவாகி வரும் திரைப்படம் தான் கங்குவா. இந்த படத்தை சிறுத்தை சிவா இயக்குகிறார்.

மிகவும் பிரம்மாண்டமாக தயாரிக்கப்பட்டு வரும் இப்படத்தின் டைட்டில் அறிவிப்பு சமீபத்தில் தான் வெளிவந்தது.  3டி தொழில்நுட்பத்தில் உருவாகும் இப்படத்தை காணவும் ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருக்கிறார்கள்.

இந்த நிலையில், இந்த படத்தின், ப்ரீ பிஸ்னஸ் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள தயாரிப்பாளர்,  டிஜிட்டல் உரிமை பற்றியும் கூறியிருக்கிறார்.

அதாவது கங்குவா திரைப்படத்தை வாங்குவதற்கு பல ஓடிடி நிறுவனங்களும் நீஇ நான் என போட்டி போட்டு வந்தது. அந்தப் போட்டியில் அமேசான் நிறுவனம் வென்று இப்படத்தின் உரிமையை தட்டி தூக்கி இருக்கிறது.

வழக்கமாக பிரம்மாண்ட பட்ஜெட் படங்கள்,  டாப் ஹீரோக்களின் படங்கள் என தேடி தேடி வாங்கி வரும் அமேசான் நிறுவனம் இப்படத்தையும் அதிக விலை கொடுத்து வாங்கி இருக்கிறது. இதன்படி இதுவரை 80 கோடி ரூபாவுக்கு கங்குவா திரைப்படம் விற்பனையாகியுள்ளது.

அந்த வகையில் கங்குவா திரைப்படத்தின் டிஜிட்டல் உரிமை 80 கோடிக்கு விற்கப்பட்டிருக்கிறது. அதுவும் சவுத் இந்தியாவில் மட்டுமே இவ்வளவு தொகைக்கு வியாபாரமாகி இருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *