லியோ படத்தில் இத்தனை பாடல்களா? : 2000 டான்சர்களை களமிறக்கிய லோகேஷ்!

லியோ படத்தில் இத்தனை பாடல்களா? : 2000 டான்சர்களை களமிறக்கிய லோகேஷ்!
  • PublishedMay 3, 2023

தளபதி விஜய் மற்றும் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகும் லியோ படத்தின் எதிர்பார்ப்பு அதிகரித்து வருகின்ற நிலையில், இந்த படத்தில் இடம்பெற்றுள்ள பாடல்கள் குறித்த தகவல்கள் கசிந்துள்ளன.

பொதுவாக லோகேஷ் தன்னுடைய படங்களில் பாடலுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க மாட்டார். அந்த வகையில் கைதி படத்தில் ஒரு பாடல்கள் கூட இடம் பெறவில்லை.

முதல்முறையாக விஜய்,  லோகேஷ் கூட்டணி மாஸ்டர் படத்தில் இணைந்தது. விஜய் படத்தில் பாடல்கள் இல்லை என்றால் எப்படி அதனால் மாஸ்டர் படத்தில் பாடல்கள் வைத்திருந்தார்.

அதேபோல் விக்ரம் படத்தில் மியூசிக் பெரிய அளவில் பேசப்பட்டது. இதனால் லியோ படத்தின் பாடல்களுக்கு லோகேஷ் அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறாராம்.

மொத்தமாக இந்த படத்தில் மூன்று பாடல்கள் இடம்பெறுகிறது. அதன்படி காஷ்மீரில் ஒரு பாடல் படமாக்கப்பட்டுள்ளது.   லியோ படத்தில் ஒரு பாடலுக்கு 2000 டான்ஸர்களை வரவழைத்து உள்ளாராம்.

தமிழ் சினிமாவில் மட்டும் இவ்வளவு டான்ஸர்கள் இல்லை என்பதால் மற்ற மொழி டான்ஸர்களையும் வரவழைத்து உள்ளனர். அதுமட்டும் இன்றி இவர்கள் எல்லோருமே ஒரே ஸ்கிரீனில் இடம்பெற உள்ளனராம். இவை எல்லாவற்றையும் விட அனிருத், விஜய், கோம்போவில் வரும் பாடல்களுக்கு தனி ரசிகர் பட்டாளமே உண்டு எனலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *