அம்பரீஷ் – சுமலதா மகனுக்கு நடந்த பிரம்மாண்ட திருமணம்

அம்பரீஷ் – சுமலதா மகனுக்கு நடந்த பிரம்மாண்ட திருமணம்
  • PublishedJune 5, 2023

ரெபெல் ஸ்டார் அம்பரீஷ் – நடிகை சுமலதா ஜோடியின் மகனான அபிஷேக் அம்பரீஷ் திருமணம் இன்று (ஜூன் 5) பிரம்மாண்டமாக பெங்களூரில் உள்ள சாம்ரவஜ்ரா அரண்மனை மைதானத்தில் நடைபெற்றது.

ஆடை வடிவமைப்பாளர் அவிவா பிடாபா என்பவரை அபிஷேக் அம்பரீஷ் திருமணம் செய்துகொண்டார்.

அபிஷேக் அம்பரீஷ் தனது நீண்ட நாள் காதலியான அவிவாவை கவுடா பாரம்பரியப முறைப்படி திருமணம் செய்துகொண்டார்.

இத்திருமணத்தில் ஏராளமான பிரபலங்கள் கலந்துகொண்டனர்.

மணமக்களை சினிமா மற்றும் அரசியல் பிரமுகர்கள் பலர் வாழ்த்தி உள்ளனர். முன்னாள் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், தெலுங்கு நடிகர் நாகபாபு ஆகியோர் நேரில் வந்து மணமக்களை வாழ்த்தினர்.

இதில் நம் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் பட்டு வேட்டி சட்டையில் கெத்தாக வந்து மணமக்களை வாழ்த்தினார்,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *