ஆலியா பட்டின் சொத்து மதிப்பு குறித்து தகவல்

ஆலியா பட்டின் சொத்து மதிப்பு குறித்து தகவல்
  • PublishedMarch 15, 2025

பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவரான ஆலியா பட்டின் சொத்து மதிப்பு குறித்து சில செய்திகள் வெளிவந்துள்ளன.

மகேஷ் பட் – Soni Razdan தம்பதிக்கு பிறந்த இவர் தனது 19 வயதில் சினிமாவில் கதாநாயகியாக நடிக்க துவங்கினார். தொடர்ந்து ரசிகர்ளை கவரும் வகையில் நடித்து வந்த ஆலியா பட் பல ஹிட் திரைப்படங்களை கொடுத்தார்.

நடிகர் ரன்பிர் கபூரை காதலித்து கடந்த 2022ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஒரு அழகிய மகள் உள்ளார்.

இன்று நடிகை ஆலியா பட்டின் 32வது பிறந்தநாளை. திரையுலக பிரபலங்களும் ரசிகர்களும் தங்களது வாழ்த்துக்களை ஆலியா பட்டிற்கு தெரிவித்து வருகிறார்கள்.

இந்த நிலையில், இவருடைய சொத்து மதிப்பு குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இவருடைய மொத்த சொத்து மதிப்பு ரூ. 550 கோடிக்கும் மேல் இருக்கும் என சொல்லப்படுகிறது.

இவருடைய கணவர் ரன்பீர் கபூரின் சொத்து மதிப்பு ரூ. 350 கோடி இருக்குமாம். இதன்மூலம் தனது கணவரை விட ஆலியா பட் அதிக சொத்துக்கு சொந்தகாரி என பாலிவுட் வட்டாரத்தில் பேசப்படுகிறது

Indian Bollywood actress Alia Bhatt

மேலும், நடிகை ஆலியா பட் ஒரு திரைப்படத்தில் நடிக்க ரூ. 15 கோடி முதல் ரூ. 18 கோடி வரை சம்பளம் வாங்கி வருவதாக கூறுகின்றனர். ஆனால் இந்த தகவல் அதிகாரப்பூர்வமானது அல்ல என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *