உடை மாறிவிட்டால் கேரக்டர் மாறிவிடுமா?…சிவாங்கி

உடை மாறிவிட்டால் கேரக்டர் மாறிவிடுமா?…சிவாங்கி
  • PublishedMarch 15, 2025

சூப்பர் சிங்கர் பிரபலமான சிவாங்கி குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின் தமிழ்நாட்டில் மிகவும் பிரபலமான செலிபிரேட்டி ஆனார்.

தொடர்ந்து படங்களில் நடித்து வரும் சிவாங்கி இப்போதெல்லாம் தனது முழுகவனத்தையும் திரைப்படங்களில் நடிப்பதிலேயே செலுத்தி வருகிறார்.

சமீப காலங்களில் மிகவும் மாடர்னாகவும், அவ்வப்போது கொஞ்சம் கிளாமராகவும் உடையணிந்து போட்டோஷூட்டுகளை வெளியிட்டு வந்தார்.

இதனைதொடர்ந்து சிலர் சிவாங்கியின் இந்த மாற்றத்தை விமர்சிக்க ஆரம்பித்தனர். பட வாய்ப்புக்காக தான் சிவாங்கி கவர்ச்சியான உடைகளை அணிவதாக கமெண்ட் அடித்தனர்.

இது குறித்து பதிலளித்துள்ள சிவாங்கி, ‘நான் மாடர்ன் உடைகளை அணிவது பட வாய்ப்புக்காக என்றும், இப்போதெல்லாம் நான் ஆடைகளின் அளவை குறைத்துவிட்டேன் என்றும் சிலர் கமெண்ட் செய்கிறார்கள்.

உண்மையில் நான் முன்பு குண்டாக இருந்தேன். அதனால் மாடர்ன் உடைகள் செட்டாகவில்லை. இப்போது உடல் எடை குறைகிறது. அதனால் மாடர்ன் உடைகள் அணிய விரும்புகிறேன்.

அதேபோல் சினிமாவில் ஆடையை கழற்றி போட்டா வாய்ப்பு கிடைக்குமா? அப்படியென்றால் அவுத்து போட்ட எல்லோருக்குமே வாய்ப்பு கிடைத்துவிட்டதா?.

உடை மாறிவிட்டால் கேரக்டர் மாறிவிடும் என்கிறார்கள். அப்படி எல்லாம் கிடையாது. காலம் முழுக்க சுடிதார் மட்டுமே அணிந்து கொண்டிருக்க முடியுமா?’ என்று நெத்தியடியில் பதில் கொடுத்துள்ளார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *