ராஷ்மிகா பேசிய விஷயம் – ரசிகர்கள் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்

ராஷ்மிகா பேசிய விஷயம் – ரசிகர்கள் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்
  • PublishedFebruary 18, 2025

இந்திய அளவில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் ராஷ்மிகா மந்தனா. அனிமல், புஷ்பா 2, சாவா என இவர் நடிப்பில் வெளிவந்த கடந்த மூன்று படங்களும் மாபெரும் அளவில் வசூல் செய்துள்ளது.

இதில் சமீபத்தில் வெளிவந்த சாவா திரைப்படம் திரையரங்கில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது. இந்த நிலையில், இப்படத்தின் நிகழ்ச்சி ஒன்றில் நடிகை ராஷ்மிகா மந்தனா கலந்துகொண்டார். அப்போது அவர் பேசிய விஷயம் தற்போது இணையத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

நடிகை ராஷ்மிகா மந்தனா பேசுகையில், “நான் ஹைதராபாத் நகரை சேர்ந்தவள். இங்கு தனியாக வந்தேன், இப்போது உங்கள் குடும்பத்தில் நானும் ஒருவர் என்று நினைக்கிறன், நன்றி” என ராஷ்மிகா பேசிய வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

இதில் தான் ஹைதராபாத்தை சேர்ந்தவர் என்று அவர் கூறியது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. பயணம் தொடர்பாகஹைதராபாத்தில் இருந்து வந்ததாக ராஷ்மிகா கூறினாரா? அல்லது தனது சொத்து ஊர் ஹைதராபாத் என குறிப்பிட்டாரா என தெளிவாக தெரியவில்லை. ஆனால், அவர் பேசிய விதத்தை வைத்து பார்க்கும்போது, அவர் தனது சொந்த ஊர் ஹைதராபாத் என கூறியது போல் தான் தெரிகிறது என கூறப்படுகிறது.

இதனால் நெட்டிசன்கள் அவரை கடுமையாக விமர்சித்து வருகிறார்கள். குறிப்பாக கன்னட ரசிகர்கள் ராஷ்மிகா மந்தனாவை கடுமையாக ட்ரோல் செய்து வருகின்றனர். விராஜ்பேட், கோடகு மாவட்டம் கர்நாடகாவில் உள்ளதா அல்லது ஹைதராபாத்தில் உள்ளதா? சொந்த ஊரை மறந்துவிட்டாயா? என கேள்வி எழுப்பி வருகின்றனர்.

மேலும் எங்கு சென்றாலும் தனது பூர்விகத்தை ராஷ்மிகா மறக்க கூடாது என பலரும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். சொந்த ஊரை விட்டு ஹைதராபாத்தில் ராஷ்மிகா செட்டிலாகியுள்ளார். அதனால்தான் அவர் இப்படி பேசியுள்ளார் என்றும் சிலர், ராஷ்மிகாவிற்கு ஆதரவாகவும் கருத்து தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *