திருமணமாகிய நிலையில் நடிப்புக்கு முற்றுப்புள்ளி! “சீதாராமன்” பிரியர்களுக்கு அதிர்ச்சி செய்தி

திருமணமாகிய நிலையில் நடிப்புக்கு முற்றுப்புள்ளி! “சீதாராமன்” பிரியர்களுக்கு அதிர்ச்சி செய்தி
  • PublishedMay 21, 2023

ரோஜா சீரியலில் நடித்து ஏராளமான ரசிகர்களை கவர்ந்தவர் பிரியங்கா நல்காரி. இந்தத் தொடர் இவருக்கு அதிகமான பிரபலத்தை பெற்றுத் தந்தது.

இந்தத் தொடரை தொடர்ந்து தற்போது இவர் சீதாராமன் என்ற தொடரில் நடித்து வருகிறார். இந்தத் தொடரும் இவருக்கு சிறப்பாக கைக்கொடுத்து வருகிறது.

இந்நிலையில் இவர் சீதாராமன் தொடரிலிருந்து விலகவுள்ளதாக தகவல்கள் வெளியகியுள்ளது.

கடந்த மார்ச் மாதம் ராகுல் என்பவரை திருமணம் செய்துக் கொண்டார் பிரியங்கா நல்காரி. இவர் மலேசியாவில் வேலை செய்துவரும் நிலையில், மலேசியாவிற்கும் சென்னைக்கும் மாறி மாறி அவர் பயணம் மேற்கொண்டு வருகிறார். சமீபத்தில் இவரது வீட்டில் ஒரு நிகழ்ச்சியையும் அவர் பதிவிட்டிருந்தார்.

இந்த நிகழ்ச்சியில் வீடியோ காலில் ராகுல் பேசினார். இந்நிலையில் சீதாராமன் தொடரிலிருந்து தான் மிகுந்த வருத்தத்துடன் விலகுவதாக பிரியங்கா தெரிவித்துளளார். இந்த கேரக்டர் தனது மனதிற்கு மிகவும் நெருக்கமானது என்றும் தான் சீதையாக இருந்த நேரத்திற்கு நன்றி கூறுவதாகவும் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

ஒவ்வொரு நாளும் அன்பை கொட்டிய ரசிகர்களுக்கு நன்றி என்றும் இந்தப் பயணத்தில் நிறைய பாடங்களை கற்றுக்கொண்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். தனிப்பட்ட முறையில் தான் வளர்ந்துவிட்டதாக நினைப்பதாகவும் அதற்கு நன்றி என்றும் கூறியுள்ளார்.

கடந்த 2010ம் ஆண்டில் தெலுங்கில் வெளியான அந்தரி பந்துவாயா என்ற படத்தில் அறிமுகமானார் பிரியாங்கா நல்காரி. தொடர்ந்து தமிழில் தீயா வேலை செய்யணும் குமாரு, சம்திங் சம்திங், காஞ்சனா 3 போன்ற படங்களில் நடித்துள்ளார். தொடர்ந்து ரோஜா தொடர் இவருக்கு மிகப்பெரிய ஏற்றத்தை கொடுத்தது.

இந்நிலையில் தற்போது சீதாராமன் தொடரும் இவருக்கு சிறப்பாக அமைந்துள்ளது. இந்நிலையில் ராகுல் வர்மா என்ற பிசினஸ்மேனை இவர் திடீரென ரகசியமாக திருமணம் செய்துக் கொண்டார்.

மலேசியாவில் உள்ள முருகன் கோயிலில் இவர்களது திருமணம் நடந்தது. இதன் புகைப்படங்களை பிரியங்கா தனது சமூக வலைதளங்களில் பகிர்ந்திரந்தார். இந்த ஜோடிக்கு வாழ்த்துக்கள் குவிந்திருந்தனர். இதனால் பிரியங்கா நல்காரி திக்குமுக்காடி போயிருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *