முடித்துக்காட்டிய பாலா! பயங்கர வேகமெடுத்துள்ள “வணங்கான்” சூர்யாவுக்கு பதிலடி

முடித்துக்காட்டிய பாலா! பயங்கர வேகமெடுத்துள்ள “வணங்கான்” சூர்யாவுக்கு பதிலடி
  • PublishedMay 20, 2023

ஆரம்ப காலத்தில் சில தோல்வி திரைப்படங்களை கொடுத்து தடுமாறி வந்த சூர்யாவுக்கு பாலா தான் ஒரு முகவரியை கொடுத்தார். அவரின் இயக்கத்தில் வெளிவந்த நந்தா படத்தை தொடர்ந்து பிதாமகன் படமும் சூர்யாவுக்கு திருப்புமுனையை ஏற்படுத்தியது. அதனாலேயே இந்த கூட்டணி மீண்டும் வணங்கான் திரைப்படத்தில் இணைந்தது.

எனினும் இந்த படப்பிடிப்பில் சில கருத்து வேறுபாடுகள் உருவானது. அதன் காரணமாக சூர்யா இந்த படத்தில் இருந்து விலகினார். இது பேரதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் அருண் விஜய், சூர்யா நடித்து வந்த கதாபாத்திரத்திற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டார். தற்போது இந்த பட சூட்டிங் எந்த பிரச்சனையும் இல்லாமல் நடந்து வருகிறது.

அந்த வகையில் சிறு இடைவெளிக்குப் பிறகு வணங்கான் படப்பிடிப்பு மீண்டும் ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது. தற்போது மகாபலிபுரம் அருகில் நடந்து வரும் இந்த ஷூட்டிங் 15 நாட்கள் வரை தொடர இருக்கிறது.

இதை அடுத்து எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் மொத்த படத்தையும் முடித்து விட பாலா திட்டமிட்டு இருக்கிறாராம்.

அதிலும் சூர்யா படத்தில் நடிக்கும் போது எப்படிப்பட்ட காட்சிகள் இருந்ததோ அதை கொஞ்சம் கூட மாற்றாமல் தான் அவர் எடுத்து வருகிறாராம். அது மட்டுமின்றி திட்டமிட்ட தேதிக்குள் படத்தை முடிக்கவும் அவர் தீவிரம் காட்டி வருகிறார். ஏனென்றால் தற்போது படத்தை தயாரித்து வருவதும் பாலா தான். அதனாலேயே இவ்வளவு வேகம் காட்டப்படுகிறது.

இதற்கு முன்பாக சூர்யா தான் இந்த படத்தை தயாரித்து வந்தார். அவர் விலகியதை அடுத்து இதுவரை செய்த செலவை பாலா எப்படி திருப்பி கொடுப்பார் என்ற பேச்சும் இருந்தது. அந்த வகையில் தற்போது இவரே படத்தை தயாரித்து வருவதால் திட்டமிட்டபடியே படத்தை வெளியிட்டு சூர்யாவுக்கான பணத்தை கொடுக்கவும் அவர் ஆயத்தமாகி வருகிறாராம்.

ஏனென்றால் ஹீரோ மாற்றப்பட்ட காரணத்தால் படம் நிச்சயம் தாமதமாகும் என்று பலரும் கூறி வந்தனர். ஆனால் சூர்யாவை பழி தீர்க்கும் பொருட்டு படத்தை டிசம்பரில் வெளியிட பாலா முடிவு செய்து இருக்கிறார். அதன்படி எத்தனை தடைகள் வந்தாலும் வணங்கான் தாமதமாகாது என அவர் சொல்லாமல் சொல்லி இருக்கிறார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *