மஞ்சக்காட்டு மைனாவாக மாறிய அதிதி ஷங்கர்… ட்ரெண்டிங்கான இன்ஸ்டா ரீல்!

மஞ்சக்காட்டு மைனாவாக மாறிய அதிதி ஷங்கர்… ட்ரெண்டிங்கான இன்ஸ்டா ரீல்!
  • PublishedMarch 11, 2023

இயக்குநர் ஷங்கரின் இளைய மகள் அதிதி ஷங்கர் மருத்துவம் படித்து விட்டு ஹீரோயினாக ஆக வேண்டும் என்கிற தனது ஆசையை அப்பாவுடன் சொல்லிய நிலையில், அழகாக முத்தையா இயக்கத்தில் கார்த்தி நடித்த விருமன் படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். தேனாக விருமன் படத்தில் தித்தித்த அதிதி ஷங்கர் மொக்கை ஜோக்குகளை சொல்லியே சிவகார்த்திகேயனின் மாவீரன் படத்தில் ஹீரோயினாக கமிட் ஆகி விட்டார்.

மாவீரன் படத்தில் நடித்து வரும் அதிதி ஷங்கர் மஞ்சள் நிற காக்ரா சோலி உடையில் மஞ்சக்காட்டு மைனாவாக போட்டுள்ள டான்ஸ் வீடியோ இணையத்தில் தீயாக பரவி வருகிறது.

மஞ்சள் நிற காக்ரா சோலி உடையில் இடுப்புக் கூடத் தெரியாமல் செம அழகாக க்ளோஸ் செய்து கொண்டு மஞ்சக்காட்டு மைனாவாக கலக்கல் டான்ஸ் போட்டு தனது ரசிகர்களுக்கு செம ட்ரீட் கொடுத்திருக்கிறார் அதிதி ஷங்கர். விருமன் படத்தில் ஜானி மாஸ்டர் போட்ட ஸ்டெப்புக்கே சளைக்காமல் ஆடியவராச்சே, சும்மா இறங்கி ஆட்டம் போட்டு இருக்கிறார்.

விஷால், ஆர்யா, மிருணாள் ரவி நடிப்பில் வெளியான எனிமி படம் ஓடியதோ இல்லையோ அந்த படத்தில் இடம்பெற்ற மால டும் டும் பாடல் பட்டித் தொட்டி எங்கும் அனைத்து பெண்கள் மற்றும் நடிகைகளின் ஃபேவரைட் பாடலாக மாறி இன்ஸ்டாகிராம் ரீல்களில் வேறலெவலில் டிரெண்டாகி வருகிறது. நான் இந்த பாட்டுக்கு டான்ஸ் ஆடுவது லேட் என்றாலும், ஆடுறேன் என கேப்ஷன் கொடுத்து அதிதி ஷங்கர் அழகாக இந்த பாட்டுக்கு நடனமாடி உள்ள வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார்.

விருமன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான அதிதி ஷங்கர் அடுத்ததாக இயக்குநர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் மாவீரன் படத்தில் நடித்து வருகிறார். விரைவில் அந்த படம் வெளியாக உள்ள சந்தோஷத்தில் தான் இப்படியொரு டான்ஸ் அதிதி ஷங்கர் போட்டுள்ளாரா என ரசிகர்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர்.

அழகா நடிக்கிறீங்க விருமன் படத்திலேயே உங்க நடிப்பு முத்திரையை பதிச்சீட்டீங்க, மாவீரன் படமும் சூப்பரா வரும் என எதிர்பார்க்கிறோம். சீக்கிரமே அப்பா இயகக்த்தில் ஒரு படம் நடிங்க உங்க ரேஞ்சே வேறலெவலில் மாறிடும் என ரசிகர்கள் அன்பு கோரிக்கை வைத்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *