விருது விழாவிற்காக ஹாங்கொங் சென்ற பொன்னியின் செல்வன் திரைப்படக் குழுவினர்!

விருது விழாவிற்காக ஹாங்கொங் சென்ற பொன்னியின் செல்வன் திரைப்படக் குழுவினர்!
  • PublishedMarch 11, 2023

இயக்குனர் மணிரத்னம் இயக்கிய ‘பொன்னியின் செல்வன்’ படம் இரண்டு பாகங்களாக தயாராகி முதல் பாகம் கடந்த வருடம் செப்டம்பர் மாதம் வெளியாகியது.

இதில் விக்ரம், கார்த்தி, ஜெயம்ரவி, சரத்குமார், பார்த்திபன், பிரகாஷ்ராஜ், ஐஸ்வர்யா ராய், திரிஷா உள்ளிட்ட பலர் நடித்து இருந்தனர்.

பொன்னியின் செல்வன் 2-ம் பாகம் வருகிற ஏப்ரல் மாதம் 28ஆம் திகதி வெளியாகவுள்ளது. இந்நிலையில், ‘பொன்னியின் செல்வன்’ படக்குழு விருது பெறுவதற்காக ஹாங்காங் சென்றுள்ளனர்.

ஹாங்காங்கில் நடைபெறவுள்ள 16-வது ஆசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழாவில், ‘பொன்னியின் செல்வன் -1’ சிறந்த திரைப்படம், சிறந்த இசையமைப்பாளர் (ஏ.ஆர்.ரஹ்மான்), சிறந்த தயாரிப்பு வடிவமைப்பாளர் (தோட்டா தரணி), சிறந்த எடிட்டிங் (ஸ்ரீகர் பிரசாத்), சிறந்த ஒளிப்பதிவு (ரவி வர்மன்) மற்றும் சிறந்த ஆடை வடிவமைப்பு (ஏகா லக்கானி) ஆகிய 6 பிரிவுகளின் கீழ் விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

தற்போது இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *