நடிகர் விஜய் நடித்து வரும் லியோ திரைப்படத்தில் நடிகர் சஞ்சய் தத் இணைந்துள்ளார்..
திரைப்படத்திற்கான படப்பிடிப்பு விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த திரைப்படத்தில் த்ரிஷா. மன்சூர் அலிகான்,சஞ்சய் தத்,ப்ரியா ஆனந்த், இயக்குனர் மிஷ்கின் மற்றும் சாண்டி மாஸ்டர், அர்ஜுன், கெளதம் வாசுதேவ் மேனன், மேத்யுவ் தாமஸ் உள்ளிட்டோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள்.
இந்த திரைப்படத்திற்கான காஷ்மீர் பகுதியில் விறு விறுப்பாக நடைபெற்று வருகின்றது.
இந்த நிலையில், தற்போது படத்தின் படப்பிடிப்பில் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் இணைந்துள்ளதாக வீடியோ ஒன்றை வெளியீட்டு தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
வீடியோவில் விஜய் மிகவும் ஸ்டைலான லுக்கில் சால்ட் அண்ட் பெப்பர் தோற்றத்தில் இருக்கிறார்.
மேலும், நேற்று சஞ்சய் தத் லியோ படத்தின் படப்பிடிப்புக்காக மும்பையில் இருந்து காஷ்மீர் வருகை தந்திருந்தார்.
பிறகு இன்று படப்பிடிப்பில் இணைந்துள்ளார். எனவே, இந்த மாதம் முழுவதும் அவர் நடிக்கும் காட்சிகள் தான் படமாக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.