“ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விக்” விஜய் குறித்து வெளியான செய்தியால் பெரும் சர்ச்சை

“ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விக்” விஜய் குறித்து வெளியான செய்தியால் பெரும் சர்ச்சை
  • PublishedMay 21, 2023

தளபதி விஜய்யின் ஹேர் ஸ்டைல் குறித்து பயில்வான் ரங்கநாதன் பேசியிருப்பது இணையத்தி விவாதமாகியுள்ளது.

விஜய் விக் வைத்திருக்கிறார் என பலரும் கூறும் சூழலில் விஜய்யின் ரசிகர்கள் அதனை தீவிரமாக மறுத்துவருகின்றனர்.

சமீபத்தில் மனோபாலா இறப்புக்கு வந்தபோதுகூட விஜய்யின் தலைமுடி குறித்த விவாதம் எழுந்தது. இந்தச் சூழலில் பயில்வான் ரங்கநாதன் விஜய்யின் முடி குறித்து பேசியிருப்பது விவாதத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

“விஜய் கடந்த ஏழு ஆண்டுகளாக படங்களில் விக் வைத்துதான் நடித்துவருகிறார். ஆனால் எஸ்.ஏ.சந்திரசேகருக்கு இன்னமும் முடி நன்றாக இருக்கிறது. விஜய்க்கு எதனால் தலைமுடி உதிர்ந்தது என்றால், ரசாயன கலவை கலந்த கெமிக்கல் ஷாம்பூக்களை பயன்படுத்துகிறார். ஷாம்பூ பயன்படுத்தியதால்தான் எனக்கு முடி உதிர்ந்துவிட்டது என்று ரஜினியே சொல்லியிருக்கிறார்.

கமல் ஹாசனுக்கும் முடி உதிர்ந்துவிட்டது. ஆனால் ஆரம்பத்திலேயே சுதாரித்துக்கொண்ட அவர் வெளிநாடுக்கு சென்று தலைமுடியை தலையில் நடும் ட்ரீட்மெண்ட்டை எடுத்துக்கொண்டார்.

ரஜினிகாந்த் தனக்கு முடி உதிர்ந்ததை பற்றி கவலைப்படாமல் என்ன இருக்கிறதோ அதனுடன் நிகழ்ச்சிகளில் பங்கேற்க ஆரம்பித்தார். ஆனால் விஜய் அப்படி இல்லை. விக் வைத்துக்கொண்டார். அதேசமயம் அஜித்துக்கு நன்றாகவே முடி இருக்கிறது.

விக் வைப்பது ஒன்றும் பெரிய தவறு இல்லை. ஆனால் ஒரேமாதிரியான விக்கை வைக்க வேண்டும். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விக்கை வைக்கக்கூடாது. சமீபத்தில் அவர் தனது ரசிகர்களை சந்தித்தபோதுகூட பெரிய டோப்பா முடியை மாட்டியிருந்தார். இதனால் அஜித் ரசிகர்களுக்கு பதில் சொல்ல முடியாமல் விஜய் ரசிகர்கள் திணறிக்கொண்டிருக்கின்றனர்” என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *