கமல் – சிம்பு திடீர் சந்திப்பு! “STR 48” குறித்து பேசப்பட்டது என்ன?

கமல் – சிம்பு திடீர் சந்திப்பு! “STR 48” குறித்து பேசப்பட்டது என்ன?
  • PublishedMay 22, 2023

சிம்புவின் STR 48 படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் பிரம்மாண்டமாக தயாரிக்கவுள்ளது. தேசிங் பெரியசாமி இயக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என சொல்லப்படுகிறது.

அதேநேரம் STR 48 படத்தில் சிம்பு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கலாம் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், கமல்ஹாசனை சிம்பு, இயக்குநர் தேசிங் பெரியசாமி திடீரென சந்தித்துக்கொண்ட புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

அதேநேரம் இப்படத்தின் சிம்புவுடன் நடிக்கும் மற்ற நடிகர்கள், நடிகைகள் குறித்த அபிஸியல் அப்டேட் எதுவும் இன்னும் வெளியாகவில்லை.

மேலும், STR 48 படத்தின் இசையமைப்பாளர் உள்ளிட்ட டெக்னிஷியன்ஸ் டீம் பற்றியும் அறிவிப்பு வரவில்லை. முதலில் பாலிவுட் லேடி சூப்பர் ஸ்டார் தீபிகா படுகோனேவிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாம். ஆனால், அவர் சம்பளம் அதிகம் கேட்டதால் தற்போது கீர்த்தி சுரேஷ் சிம்பு ஜோடியாகலாம் எனக் கூறப்படுகிறது.

முன்னதாக பத்து தல படப்பிடிப்பு முடிந்ததுமே தாய்லாந்து சென்றிருந்தார் சிம்பு. STR 48 படத்துக்காக தனது உடல் எடையை குறைத்ததோடு, மார்ஷியல் ஆர்ட்ஸும் கற்றுக்கொண்டு காளை பட சிம்புவாக சென்னை திரும்பினார். அதனைத் தொடர்ந்து சில தினங்களுக்கு முன்னர் சிம்பு லண்டன் சென்றதாகவும் செய்திகள் வெளியாகின. இதுவும் STR 48 படத்துக்காகதான் என சொல்லப்பட்டது.

இதனால், STR 48 ஷூட்டிங் எப்போது தொடங்கும் என்பதே புரியாத புதிராக இருந்தது. இந்நிலையில், தற்போது கமலுடன் சிம்புவும் இயக்குநர் தேசிங் பெரியசாமியும் சந்தித்துக்கொண்ட புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. ராஜ்கமல் பிலிம்ஸின் டிவிட்டர் பக்கத்தில் இந்தப் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. ஆனால், இந்த சந்திப்புக் குறித்த எந்த தகவலையும் ராஜ்கமல் பிலிம்ஸ் குறிப்பிடவில்லை.

கமல், சிம்பு, இயக்குநர் தேசிங்கு பெரியசாமி ஆகியோருடன் தயாரிப்பாளர் மகேந்திரனும் இந்த போட்டோவில் இடம்பெற்றுள்ளார். இதனால், விரைவில் STR 48 படத்தின் தரமான அபிஸியல் அப்டேட்ஸ் எதுவும் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அது STR 48 படத்தின் பூஜை அல்லது ஷூட்டிங் குறித்த அப்டேட்டாக இருக்கலாம் என கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *