19 வயதில் அந்தரங்க டார்ச்சர்.. ஷாக் கொடுத்த நடிகைக்கு கொட்டு வைத்த பயில்வான்

19 வயதில் அந்தரங்க டார்ச்சர்.. ஷாக் கொடுத்த நடிகைக்கு கொட்டு வைத்த பயில்வான்
  • PublishedMarch 11, 2024

இப்போதெல்லாம் நடிகைகள் தங்களுக்கு நடக்கும் அந்தரங்க தொல்லைகள் குறித்த விஷயங்களை பகிரங்கமாக தெரியப்படுத்தி வருகின்றனர். சோசியல் மீடியாவின் புழக்கம் அதிகமாக இருப்பதால் சம்பந்தப்பட்டவர்களின் முகத்திரை இதன் மூலம் கிழிந்து வருகிறது.

அப்படித்தான் தற்போது பாலிவுட் நடிகை அங்கிதாவும் தனக்கு நடந்த அட்ஜஸ்ட்மென்ட் டார்ச்சர் பற்றி ஓப்பனாக தெரிவித்துள்ளார்.

சுஷாந்த் சிங் ராஜ்புட்டின் முன்னாள் காதலி ஆன இவர் சில சீரியல்களில் நடித்திருக்கிறார். ஆனால் இதற்கு முன்பே அவர் சினிமா வாய்ப்புகளை தான் தேடி இருக்கிறார்.

அப்போது தனக்கு நடந்த மோசமான அனுபவங்களை தற்போது ஒரு பேட்டியில் வெளிப்படையாக இவர் தெரிவித்துள்ளார். அதாவது சினிமா வாய்ப்பு தேடும்போது பல தயாரிப்பாளர்கள் தன்னை அவர்களின் ஆசைக்கு இணங்க சொன்னதாக அவர் தெரிவித்துள்ளார்.

அதிலும் தென்னிந்திய தயாரிப்பாளர் ஒருவர் தன் படத்தில் ஹீரோயினாக நடிக்க வைக்க அட்ஜஸ்ட்மென்ட் செய்ய வேண்டும் என்று கேட்டிருக்கிறார். இதன் மூலம் மிகப்பெரிய நடிகையாக வளரலாம் என்றும் ஆசை வார்த்தை கூறியிருக்கிறார். ஆனால் அங்கீதா அவரை கடுமையாக திட்டி விட்டு வந்து விட்டாராம்.

அவருடைய இந்த பேட்டி தற்போது வைரலானதை தொடர்ந்து பயில்வான் கடுமையாக அவரை விளாசி இருக்கிறார். அதாவது இந்த சம்பவம் அவருடைய 19 வயதில் நடந்திருக்கிறது. தற்போது 39 வயதாகும் அவர் இத்தனை நாட்கள் அதை சொல்லாமல் ஏன் இருந்தார் என பயில்வான் கேள்வி எழுப்பி உள்ளார்.

அது மட்டுமல்லாமல் தயாரிப்பாளர் தன்னை தவறாக அணுகினார் என்று சொல்லத் தெரிந்த அங்கீதாவுக்கு அவர் பெயரை சொல்ல முடியவில்லையா எனவும் கொட்டு வைத்துள்ளார்.

இப்போதெல்லாம் பப்ளிசிட்டிக்காக கூட சில நடிகைகள் இது போன்ற தகவல்களை பகிர்ந்து வருகிறார்கள். இவ்வளவு தூரம் புகார் கூறும் நடிகைகளுக்கு ஏன் பெயரை கூறுவதில் தயக்கம் என்று தான் தெரியவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *