கமலுடன் சண்டை? டுபாய் பறந்தார் சிம்பு… STR 48க்கு என்னதான் நடக்கும்?

கமலுடன் சண்டை? டுபாய் பறந்தார் சிம்பு… STR 48க்கு என்னதான் நடக்கும்?
  • PublishedMarch 11, 2024

கமல் தயாரிப்பில் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் சிம்பு தன்னுடைய 48வது படத்தில் நடித்து வருகின்றார்.

இதற்காக கடுமையாக பயிற்சியும் மேற்கொண்டு வருகிறார். இது குறித்த புகைப்படங்கள் சோஷியல் மீடியாவில் வெளியாகி வைரலானது. இப்படத்தின் போஸ்டர் கூட கடந்த மாதம் வெளியாகி இருந்தது.

ஏற்கனவே சிம்பு இப்படத்தில் இரு வேடத்தில் நடிக்கப் போகிறார் என்று தகவல்கள் வெளிவந்த நிலையில் போஸ்டரும் அதை உறுதிப்படுத்தியது. பீரியட் மூவியாக உருவாகும் இப்படத்தை ரசிகர்கள் பெரும் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர். ஆனால் படத்தின் ஷூட்டிங் தான் இன்னும் ஆரம்பித்தபாடில்லை.

இதனால் நொந்து போன சிம்பு தற்போது மீண்டும் துபாய்க்கு பறந்து விட்டாராம். ஏனென்றால் பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகும் இப்படத்தின் ஆரம்ப கட்ட வேலைகள் மாத கணக்கில் நடைபெற்று வருகிறது. அதேபோன்று விஎப்எக்ஸ் உள்ளிட்ட அனைத்து வேலைகளையும் பட குழுவினர் விறுவிறுப்பாக செய்து வருகின்றனர்.

இதனால் படப்பிடிப்பு தொடங்குவதற்கு சற்று தாமதமாகும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆனால் சிம்புவோ சூட்டிங் போகலாம் வாங்க என்று கூறியும் கூட அது பலனளிக்கவில்லை. இப்படியே போனால் வேலைக்காகாது என்று அவர் தற்போது கோபித்துக் கொண்டு வெளிநாடு பறந்து விட்டார்.

ஏற்கனவே இதற்காக காத்திருந்து நொந்து போன அவர் விளம்பர படங்களின் மூலம் கல்லா கட்டி வந்தார். சமீபத்தில் கூட பிரபல நிறுவனத்தின் விளம்பர படத்தில் இவர் நடித்து கை நிறைய காசு பார்த்திருக்கிறார்.

அந்த காசை எடுத்துக் கொண்டு தான் தற்போது அவர் துபாயில் லைஃபை என்ஜாய் செய்ய கிளம்பி விட்டாராம்.

இந்த செய்தியால் சிம்புவின் ரசிகர்கள் தான் டென்ஷனாகி இருக்கின்றனர். எப்படியாவது இந்தப் படத்தை ஸ்டார்ட் பண்ண சொல்லுங்கப்பா என எக்ஸ் தளத்தில் அவர்கள் கதறி வருவதையும் நம்மால் பார்க்க முடிகிறது. ஆனாலும் இயக்குனர் பக்காவாக அனைத்தையும் செய்ய வேண்டும் என ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து செய்து வருகிறாராம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *