படிக்காதவன் பட குட்டி ரஜினி திடீர் மரணம்… அதிர்ச்சியில் திரையுலகம்

படிக்காதவன் பட குட்டி ரஜினி திடீர் மரணம்… அதிர்ச்சியில் திரையுலகம்
  • PublishedMarch 11, 2024

பிரபல இயக்குநரும், நடிகை சுஜிதாவின் சகோதரருமாகிய சூரியகிரண் உடல்நலக் குறைவால் திடீரென உயிரிழந்துள்ளார்.

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான சூரியகிரண், மௌனகீதங்கள், படிக்காதவன் உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்துள்ளார்.

பின்பு தெலுங்கில் பிரபல இயக்குநராக வலம்வந்த இவர், தமிழில் வரலட்சுமி சரத்குமார் நடித்த அரசி திரைப்படம், விரைவில் திரைக்கு வரவுள்ளது.

சமீபகாலமாக மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டிருந்த சூரியகிரண், சிகிச்சை பலனின்றி 48 வது வயதில் உயிரிழந்தார்.

இவர் பிரபல நடிகை காவேரியின் முன்னாள் கணவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அவரது உடல் நாளை அடக்கம் செய்யப்படவுள்ள நிலையில், திரையுலக பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *