ஒன்னுமே செய்யாமல் ஒரு மணி நேரத்திற்கு 8 லட்சம்! பேரம் பேசிய திவ்யா

ஒன்னுமே செய்யாமல் ஒரு மணி நேரத்திற்கு 8 லட்சம்! பேரம் பேசிய திவ்யா
  • PublishedJune 10, 2023

சன் டிவி செவ்வந்தி சீரியல் கதாநாயகி திவ்யா ஸ்ரீதருக்கும், அவருடைய கணவரான விஜய் டிவி செல்லம்மா சீரியல் நடிகர் அர்ணவுக்கும் இடையே இருக்கும் குடும்ப பிரச்சனை சமீப காலமாகவே சமூக வலைத்தளத்தை பயன்படுத்தும் பலருக்கும் தெரிந்ததுதான்.

இருவரும் திருமணம் முடித்து வாழ்ந்து வந்த நிலையில், திடீரென கர்ப்பமாக இருக்கும் என்னை என்னுடைய கணவர் இன்னொரு நடிகையோடு இருக்கும் தொடர்பு காரணமாக அடித்து துன்புறுத்துகிறார் என்று திவ்யா கவர்மெண்ட் ஹாஸ்பிடலில் அட்மிட் ஆகி பரபரப்பாக குற்றச்சாட்டுகளை வைத்து பலரையும் அதிர்ச்சியமடைய வைத்திருந்தார்.

அதை தொடர்ந்து அர்ணவ் கைது செய்யப்பட்டு பின்பு வெளியே வந்து தற்போது செல்லமா சீரியலில் தொடர்ந்து நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் சமீபத்தில் தான் திவ்யாவிற்கு பெண் குழந்தை பிறந்திருக்கிறது.

அதை தொடர்ந்து சில மாதங்களுக்கு பிறகு திவ்யா தன்னுடைய கணவரான அர்ணவ் பல பெண்களின் வாழ்க்கையை சீரழித்திருக்கிறார். திருநங்கையோடும் வாழ்ந்து இருக்கிறார். ஆண் பைலட் ஒருவரோடு நெருக்கமாக பேசி அவரிடமும் இருந்து பணம் வாங்கிவிட்டு அவரை விலக்கி வைத்ததால் அவர் தற்கொலை செய்து கொண்டார் என்று பல அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை ஆதாரங்களோடு பிரபல செய்தி சேனலில் வெளியிட்டு இருந்தார்.

இந்த நிலையில் நான் செஞ்சது தப்புன்னா திவ்யா மட்டும் ரொம்ப யோக்கியமா? திவ்யா என்னெல்லாம் செஞ்சு இருக்கான்னு தெரியுமா? என்று அர்ணவ் பரபரப்பாக பல குற்றச்சாட்டுகளை திவ்யா மீது சுமத்தி இருந்தார். அதில் திவ்யாவுக்கும் சீரியல் நடிகர் ஈஸ்வருக்கும் தவறான உறவு இருக்கிறது என்றும் இருவரும் பேசிய ஸ்க்ரீன்ஷார்ட்களை பாருங்க என்று இணையத்தில் வெளியிட்டு இருந்தார்.

இதைப் பார்த்து யார் மீது சரி யார் மீது தப்பு என்று புரிந்து கொள்ளாமல் ரசிகர்கள் இருக்கும் நிலையில், இப்போது அடுத்ததாக அர்ணவ் ஒரு அதிர்ச்சிகரமான ஸ்க்ரீன் ஷாட்களை வெளியிட்டு இருக்கிறார். அதில் திவ்யாவிற்க்கு சிங்கப்பூரிலிருந்து ரசிகர் ஒருவர் மெசேஜ் செய்து இருக்கிறார். அப்போது உங்களை பார்க்க வேண்டும் என்று அந்த ரசிகர் சொல்ல, திவ்யா புகைப்படம் வைத்த ஐடியில் இருந்து எனக்கு இன்ட்ரஸ்ட் இல்லை என்று கூறி இருக்கிறது.

பிறகு அந்த நபர் தொடர்ந்து மெசேஜ் செய்து கொண்டிருக்கும் போது நான் ஒரு நாள் சந்திப்பதற்காக ஒரு மணி நேரத்திற்கு 4 லட்சம் ரூபாய் தருகிறேன் என்று சொல்லி இருக்கிறார். அதற்கு திவ்யாவின் புகைப்படங்கள் இருந்த அக்கவுண்டில் இருந்து நான்கு லட்சம் போதாது எனக்கு 8 லட்சம் வேண்டும் என்று பேரம் பேசி இருக்கிறது. அதற்கு அந்த ரசிகரோ உங்களை பார்த்தால் மட்டும் போதும் நான் ஒரு மணி நேரத்திற்கு 8 லட்சம் தருகிறேன் என்று கூறியிருக்கிறார்.

தற்போது இந்த ஆதாரம் வெளியான நிலையில் இதில் யார் வெளியிட்ட உண்மை சரியானது என்று ரசிகர்கள் குழப்பத்தில் இருக்கின்றனர். ஆனாலும் இதைத் தொடர்ந்து திவ்யா என்ன விளக்கம் கொடுக்கப் போகிறார் என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *