பாலிவுட்டை தொடர்ந்து டோலிவுட்டை புரட்டிப்போட தயாராகும் அட்லீ…

பாலிவுட்டை தொடர்ந்து டோலிவுட்டை புரட்டிப்போட தயாராகும் அட்லீ…
  • PublishedApril 1, 2024

ராஜா ராணி படத்தின் மூலமாக தமிழ் சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகமானவர் அட்லீ.

அடுத்ததாக தொடர்ந்து விஜய் நடிப்பில் தெறி, மெர்சல் மற்றும் பிகில் என மூன்று ப்ளாக்பஸ்டர் படத்தை இயக்கினார்.

அடுத்ததாக 2023 ஆம் ஆண்டு ஷாருக்கான நடித்து வெளியான ஜவான் படத்தை இயக்கினார். நயன் தாரா , தீபிகா படுகோண், பிரியாமணி, விஜய் சேதுபதி போன்ற பல முன்னணி நடிகர்கள் நடித்து இருந்தனர்.

இந்திய சினிமாவில் மிக அதிக வசூலை பெற்ற பட்டியலில் 5 ஆவது இடத்தை ஜவான் பிடித்தது. இதுவரை 1200 கோடி ரூபாய் வசூல் செய்தது குறிப்பிடத்தக்கது.

அடுத்ததாக அட்லீ, புஷ்பா நடிகரான அல்லு அர்ஜூன் நடிப்பில் படத்தை இயக்குகிறார். இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தின் கதாநாயகியாக சமந்தா அல்லது திரிஷா நடிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இப்படத்தை கலாநிதி மாறனின் சன் பிக்சர்ஸ் மற்றும் மைத்திரி மூவி மேக்கர்ஸ் இணைந்து தயாரிக்கவுள்ளனர்.

இந்தி சினிமாவில் ஒரு இமாலய வெற்றியை தொடர்ந்து டோலிவுட்டில் கால் பதிக்கும் அட்லீ அல்லு இதனால் ரசிகர்களிடையே மிகப் பெரிய எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. இப்படத்தின் அதீகாரப்பூர்வ அறிவிப்பு அடுத்தவாரம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *