கேரள மாந்திரீகத்தில் கட்டுப்பட்டுள்ள விஜய்! ஆட்டிப்படைக்கும் நபர்… அப்பா வெளியிட்ட அதிர்ச்சி செய்தி

கேரள மாந்திரீகத்தில் கட்டுப்பட்டுள்ள விஜய்! ஆட்டிப்படைக்கும் நபர்… அப்பா வெளியிட்ட அதிர்ச்சி செய்தி
  • PublishedApril 1, 2024

விஜய் இன்று தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு தலைவராக உருவாகுவதற்கு முக்கிய காரணம் அவருடைய அப்பா தான். அவருடைய வழிகாட்டுதல் தான் இந்த உயரத்தை அவர் அடைவதற்கு காரணமாகவும் இருக்கிறது.

ஆனால் யார் கண் பட்டதோ இன்று அப்பா மகன் இருவரும் எதிரெதிர் துருவங்களாக இருக்கின்றனர். அதில் விஜய் சொந்த வாழ்க்கை குறித்து எதையும் பேசாமல் அமைதியாக இருந்து விடுகிறார்.

ஆனால் எஸ் ஏ சந்திரசேகர் அவ்வப்போது சர்ச்சை கருத்துக்களை வெளியிட்டு வருகிறார். அதில் அவர் கூறியிருக்கும் திடுக்கிடும் தகவல்கள் அதிர்வலையை ஏற்படுத்தி இருக்கிறது.

அதன்படி விஜய்யை ஆட்டிப்படைப்பது புஸ்ஸி ஆனந்த் என அவர் பல வருடங்களாகவே சொல்லி வருகிறார். மேலும் கேரளா மாந்திரீகம் செய்து தளபதியை அவர் மயக்கி வைத்திருக்கும் செய்தியையும் குறிப்பிட்டுள்ளார்.

இதனால் அவர் சுயபுத்தியில் இல்லை. அதை பயன்படுத்திக் கொண்ட புஸ்ஸி சில தகிடு தத்தம் செய்து வருவதாக எஸ் ஏ சி தொடர் குற்றச்சாட்டுகளை எழுப்பி வருகிறார்.

அது மட்டுமின்றி ஒரு சோசியல் மீடியா குரூப்பை அவர் வைத்திருக்கிறாராம். விஜய்யும் இதில் இருக்கிறார். அதன்படி புஸ்ஸி அலுவலகத்தில் தரையில் படுத்திருப்பது போல் போட்டோ எடுக்க சொல்லுவாராம்.

அது அந்த குரூப்பில் ஷேர் செய்யப்படும். அதை பார்த்த விஜய் உடனே அய்யோ நமக்காக இவர் இவ்வளவு கஷ்டப்படுகிறார் என நினைப்பார்.

அதை தொடர்ந்து அண்ணே நாளையிலிருந்து என் ரூமில் ரெஸ்ட் எடுங்க என சொல்வார். இப்படி பல வேலைகளை பார்த்து தான் விஜய்யை அவர் கண்ட்ரோல் செய்து கொண்டிருக்கிறார்.

அதன் காரணமாகவே அவர் ஒரு கட்டத்தில் தன் அப்பாவை வேண்டாம் என ஒதுக்கி விட்டதாக எஸ்.ஏ.சி ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார். தற்போது கட்சி ஆரம்பித்த பிறகு புஸ்ஸியின் ஆட்டம் அளவுக்கு அதிகமாக இருக்கிறது.

இதையெல்லாம் வைத்து பார்த்தால் ஒன்றுக்கொன்று சரியாகத்தான் இருக்கிறது. விஜய் இப்போது சுதாரிக்காவிட்டால் கட்சியின் நிலைமை அதோ கதி தான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *