தலைவர் 171 படத்தின் பெயர் இதுவா? லோகேஷின் ரகசியம் கசிந்தது…

தலைவர் 171 படத்தின் பெயர் இதுவா? லோகேஷின் ரகசியம் கசிந்தது…
  • PublishedApril 1, 2024

ரஜினிகாந்த் இப்போது வேட்டையன் படத்தில் நடித்து வருகிறார். த.செ.ஞானவேல் இயக்கும் அந்தப் படம் தரமான சம்பவமாக இருக்கும் என ரசிகர்கள் கூறிவருகின்றனர்.

இந்தப் படத்துக்கு பிறகு கோலிவுட்டின் மோஸ்ட் வாண்டட் இயக்குநரான லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்கிறார் ரஜினிகாந்த்.

படத்துக்கு தற்காலிகமாக தலைவர் 171 என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. ஜெயிலர் படத்தை தயாரித்த சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்தப் படத்தை தயாரிக்கவுள்ளது.

கமல் ஹாசனுக்கு எப்படி விக்ரம் என்ற மெகா ஹிட் படத்தை லோகேஷ் கனகராஜ் கொடுத்தாரோ அதேபோல்தான் இந்தப் படத்தையும் மெகா ஹிட் படமாக கொடுக்க வேண்டும் என்ற முனைப்பில் இருக்கிறார் லோகி.

இந்தப் படத்தின் கதையையும், திரைக்கதையையும் செம சூப்பராக எழுதுவதற்காக சமூக வலைதளங்களுக்கு தற்காலிகமாக பை சொல்லியிருக்கிறார்.

மேலும் அவரது கதை விவாதத்துக்காக சன் பிக்சர்ஸ் நிறுவனம் ஒரு வீட்டையும் ஆஃபிஸாக போட்டுக்கொடுத்திருக்கிறது.

சூழல் இப்படி இருக்க படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சில நாட்களுக்கு முன்பு வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. அதில் ரஜினியின் கைகளில் தங்கத்தால் ஆன கடிகாரங்களால் விலங்கு சூழப்பட்டிருந்தது.

அந்தப் போஸ்டரை பார்த்த பிறகு கதை குறித்து பல்வேறு யூகங்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. அதன்படி இதில் ரஜினிகாந்த் கேங்ஸ்டராக நடிக்கிறார் என்று ஒரு தகவலும் இல்லை இல்லை இந்தப் படம் டைம் லூப் கான்செப்ட்டில் உருவாகிறது என்றும் ஒரு தகவல் ஓடிக்கொண்டிருக்கிறது.

இந்தச் சூழலில் படத்தின் பெயர் குறித்து புதிய தகவல் ஒன்று தெரியவந்திருக்கிறது. அதாவது படத்துக்கு கழுகு என்று பெயர் வைத்திருக்கிறாராம் லோகேஷ் கனகராஜ்.

கழுகு என்ற படம் ரஜினிகாந்த் நடிப்பில் எஸ்.பி.முத்துராமன் இயக்கத்தில் கடந்த 1981ஆம் ஆண்டு வெளியானது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *