காதல் கண் கட்டுதே… வெளியேறிய பின் கதறும் நடிகை

காதல் கண் கட்டுதே… வெளியேறிய பின் கதறும் நடிகை
  • PublishedDecember 26, 2024

அந்த ரியாலிட்டி ஷோ கிட்டத்தட்ட முடியும் நிலைக்கு வந்துவிட்டது. ஆனாலும் ஆடியன்ஸ் எதிர்பார்த்த பரபரப்போ சுவாரஸ்யமோ இல்லை என்பதுதான் உண்மை.

அதில் பங்கு பெற்ற நடிகை ஒருவர் தற்போது மிகுந்த மன உளைச்சலில் இருக்கிறாராம். அந்த நிகழ்ச்சியே ஒருவரின் உண்மை குணத்தை வெளியில் கொண்டு வருவது தான்.

அதே போல் கண்டன்டுக்காக யார் வேண்டுமானாலும் எது வேண்டுமானாலும் செய்யலாம். இதற்கு முந்தைய சீசன்களில் முக்கிய கண்டன்ட்டாக இருந்தது காதல்தான்.

அப்படித்தான் இந்த சீசனிலும் ஒரு காதல் ஜோடி இருந்தது. அதில் திறமையான போட்டியாளர் என நினைத்த நடிகை போகப் போக சொதப்பியதுதான் பலருக்கும் அதிர்ச்சி.

அந்த சீரியல் ஹீரோ மீது அவருக்கு இருந்த காதலை வெளிப்படையாக சொன்னார். ஆனால் அந்த நடிகரோ இருக்கு இல்லை என்று சொல்லாமல் மழுப்பினார்.

தற்போது நிகழ்ச்சியை விட்டு வெளியேறிய நடிகை தேவையில்லாமல் கிடைத்த வாய்ப்பை இழந்து விட்டோமோ என புலம்பி வருகிறாராம்.

இது எல்லாவற்றிற்கும் மேலாக நடிகர் பின்னால் பேசிய புறணியும் அவரை காயமடைய செய்து விட்டது. காதல் மயக்கத்தில் தடுமாறி விட்டோம் என்று அவர் வருத்தப்பட்டுக் கொண்டிருக்கிறாராம்.

ஆனால் இனிமேல் என்ன பலன். கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் எதற்கு? அப்படிப்பட்ட நிலையில் தான் நடிகை இருக்கிறார். இருந்தாலும் இதன் பிறகு புத்திசாலித்தனமாக இருந்து கொண்டால் சரிதான்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *