அதிக புள்ளிகள் பெற்று சன்டிவி சீரியல்களையும் பின்னுக்குத்தள்ளிய சின்னமருமகள்

அதிக புள்ளிகள் பெற்று சன்டிவி சீரியல்களையும் பின்னுக்குத்தள்ளிய சின்னமருமகள்
  • PublishedMarch 21, 2025

விஜய் டிவியை பொருத்தவரை டிஆர்பி ரேட்டிங்கில் அதிக புள்ளிகள் பெற்று முதல் இடத்தில் வருவது சிறகடிக்கும் ஆசை சீரியல் தான். இதற்கு காரணம் எதார்த்தமான கதைகள், ஆர்டிஸ்டிகளின் நடிப்பு ரசிக்கும்படி இருக்கும். ஆனால் ரோகிணி செய்த பொய்யும் பித்தலாட்டமும் யாருக்கும் தெரிய வரவில்லை.

அதிலும் ஒவ்வொரு விஷயத்திலும் மாட்டாமல் தப்பித்துக் கொண்டிருக்கும் ரோகிணி தற்போது மாமாவாக நடிக்க வந்த மணி மூலமாவது மாட்டுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் தற்போது வந்த கதைகளின் படி கல்யாணத்தில் கூட அம்மணி மாட்டவில்லை. ரோகிணியும் எஸ்கேப் ஆகிறார் என்பது தெரிந்ததால் மொத்தமாக இந்த நாடகத்தை பார்ப்பதற்கு வெறுத்துப் போய் விட்டார்கள்.

ரோகினி செய்த வினைகள் எல்லாமே வெளி வந்தால்தான் இந்த நாடகம் பழைய மாதிரி சூடு பிடிக்க ஆரம்பிக்கும். அப்படி இல்லை என்றால் மொத்தமாக இந்த சீரியல் காணாமல் போய்விடும்.

இன்னொரு பக்கம் இந்த சீரியலை பின்னுக்கு தள்ளி முன்னேறியது விஜய் டிவியின் கிரின்ச் சீரியல் என்று மக்கள் சொல்லும் சின்ன மருமகள் சீரியல் தான்.

அதாவது பெருசாக கதைகள் ஒன்றும் இல்லை, விறுவிறுப்பான காட்சிகளும் இல்லை. ஆனாலும் ஏதோ ஒரு சீரியல் என்பது போல மொக்கையா தான் கதைகள் போய்க்கொண்டிருந்தது. ஆனால் அப்படிப்பட்ட இந்த சீரியல் தான் விஜய் டிவியில் அதிக புள்ளிகள் பெற்றிருக்கிறது. அதற்கு இன்னொரு காரணம் பிரேம் டைமிங் ஆன 9.30 மணிக்கு ஒளிபரப்பாகுவதால் தான்.

அதே நேரத்தில் சன் டிவியில் சூப்பர் என்று சொல்லக்கூடிய எதிர்நீச்சல் சீரியலையும் பின்னுக்குத் தள்ளும் அளவிற்கு டிஆர்பி ரேட்டிங்கில் அதிக புள்ளிகளை சின்ன மருமகள் பெற்றிருக்கிறது.

அத்துடன் விஜய் டிவியின் ஃபேவரிட் சீரியல் என்று சொல்லப்படும் மகாநதி மற்றும் அய்யனார் துணை சீரியலையும் ஓவர் டேக் பண்ணி சின்ன மருமகள் சீரியல் 7.81 புள்ளிகளை பெற்றிருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *