மறைந்த நடிகை சித்ராவின் தந்தை தற்கொலை – அதிகாலையில் அதிர்ச்சி

மறைந்த நடிகை சித்ராவின் தந்தை தற்கொலை – அதிகாலையில் அதிர்ச்சி
  • PublishedDecember 31, 2024

மறைந்த சின்னத்திரை நடிகை சித்ராவின் தந்தை தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார். மகள் தற்கொலை செய்துக்கொண்டு இறந்த நிலையில், தற்போது தந்தையும் தற்கொலையால் உயிரிழந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரபல சின்னத்திரை நடிகையான சித்ரா கடந்த 2020 டிசம்பர் 9-ம் தேதி சென்னை பூந்தமல்லி அடுத்த நசரத்பேட்டையில் உள்ள ஓட்டலில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

இதுகுறித்து நசரத்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். மகள் மரணத்தில் மர்மம் இருப்பதாக சித்ராவின் தந்தை, காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனையடுத்து, சித்ரா தற்கொலைக்கு அவரது கணவர் ஹேம்நாத் தான் காரணம் என்று கூறப்பட்ட நிலையில், அவர் 2020 டிசம்பர் 15-ம் தேதி கைது செய்யப்பட்டார்.

பின்னர், 2021 மார்ச் 2-ம் தேதி ஜாமீனில் வெளியே வந்தார்.

தொடர்ந்து நடிகை சித்ராவின் கணவர் ஹேம்நாத் நிரபராதி எனவும் இந்த வழக்கில் இருந்து அவரை விடுவிப்பதாக கூறி திருவள்ளூர் மகிளா விரைவு நீதிமன்றம் தீர்ப்பளித்தது..

இந்த நிலையில் தான் சித்ராவின் தந்தை தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்ட அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

சித்ராவின் தந்தை காமராஜ் மன உளைச்சலில் இருந்த நிலையில் இன்று காலை சென்னை திருவான்மியூர் பகுதியில் உள்ள அவருடைய வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். உடலை கைப்பற்றிய திருவான்மியூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *