பிக்பாஸ் போட்டியாளராக என்ட்ரியான காங்கிரஸ் எம்எல்ஏ… வெடித்த சர்ச்சை
கர்நாடகாவில் மக்கள் சில பிரச்சனைகளை எதிர்கொண்டு வரும் நிலையில் ஜாலியாக பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக காங்கிரஸ் எம்எல்ஏ பிரதீப் ஈஸ்வர் பங்கேற்று இருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இவரது இந்த செயலால் மக்கள் கொதிப்போய் உள்ளனர்.
100 நாட்கள் வெளியுலக தொடர்பு ஏதுமின்றி பிக்பாஸ் வீட்டுக்குள் இருப்பதோடு, பிக்பாஸ் கொடுக்கும் டாஸ்க்குகளை வெற்றிகரமாக செய்து முடிப்பவர்கள் வெற்றியாளர்களாக அறிவிக்கப்படுவார்கள்.
இந்த நிகழ்ச்சிக்கு இந்தியாவில் பல்வேறு மொழி சேனல்களிலும் நடத்தப்பட்டு வருகிறது.தமிழ்நாட்டில் விஜய் தொலைக்காட்சியில் பிக்பாஸ் நிகழ்ச்சி நடந்து வருகிறது. அதேபோல் கர்நாடகாவில் கலர்ஸ் தொலைக்காட்சியில் பிக்பாஸ் 10 வது சீசன் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்த கன்னட பிக்பாஸ் நிகழ்ச்சி நேற்று தொடங்கியது. முதல் நாளான நேற்றைய நிகழ்ச்சியையொட்டி ப்ரோமோ வீடியோ வெளியானது. அந்த வீடியோ மூலம் கர்நாடகாவில் சிக்பள்ளாப்பூர் தொகுதியின் எம்எல்ஏவான காங்கிரஸ் கட்சியின் பிரதீப் ஈஸ்வர் போட்டியாளராக பங்கேற்று இருப்பது தெரியவந்தது. இவர் டிரம்ஸ் பீட்டுக்கு ஏற்க நடனமாடியபடி பிக்பாஸஅ வீட்டுக்குள் நுழையும் காட்சிகள் இடம்பெற்றிருந்தது. மேலும் அவர் பிக்பாஸில் போட்டியாளராக பங்கேற்றதில் சந்தோஷமடைகிறேன் எனவும் அவர் கூறியிருந்தார்.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானது. இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். மாநிலத்தில் கடும் வறட்சி நிலவி வருகிறது. மேலும் மக்களுக்கு ஏராளமான பிரச்சனைகள் உள்ளது. ஆனால் காங்கிரஸ் எம்எல்ஏ பிரதீப் ஈஸ்வர் எந்த கவலையும் இன்றி பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார். அவர் எம்எல்ஏவாக இருப்பதால் அரசிடம் இருந்து சம்பளம் பெற்றுவிட்டு இப்படி பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கலாமா? இவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலரும் தங்களின் கோரிக்கையை விமர்சனமாக முன்வைத்தனர்.
மேலும் வந்தே மாதரம் சமூக சேவைகள் அமைப்பு சார்பில் சபாநாயகர் யுடி காதருக்கும் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதில் பிரதீப் ஈஸ்வரின் சம்பளம் மற்றும் அலோவன்ஸை உடனே நிறுத்த வேண்டும். மேலும் அவரை எம்எல்ஏ பதவியில் இருந்து நீக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. இதேபோல் பலரும் இந்த கோரிக்கையை வலைதளங்களில் வைத்து வருகின்றனர்.
தற்போது காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏவாக இருக்கும் பிரதீப் ஈஸ்வரின் வயது 38. இவர் கோச்சிங் நிறுவனம் நடத்தி வருகிறார்.
சமீபத்தில் நடந்து முடிந்த தேர்தலில் சிக்பள்ளாப்பூர் சட்டசபை தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டார்.
இவர் பாஜகவின் சுகாதாரத்துறை அமைச்சரும், சிக்பள்ளாப்பூர் தொகுதியில் செல்வாக்கு மிக்க நபராகவும் இருக்கும் சுதாகரை வீழ்த்தி வெற்றி பெற்றார்.
இந்நிலையில் தான் தற்போது அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று சர்ச்சையில் சிக்கி உள்ளது.