பாக்கியலட்சுமிக்கு நேரம் வந்தாச்சு.. முடிவை பற்றி போட்டு உடைத்த ராமமூர்த்தி
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாக்கியலட்சுமி சீரியல் தொடங்கி கிட்டத்தட்ட நான்கு வருடங்கள் ஆன நிலையில் தற்போது முடிவுக்கு கொண்டுவர டீம் முடிவெடுத்துள்ளது.
பாக்யா டீம் அடுத்தடுத்து வேற சீரியலில் கமிட் ஆகி வருவதால் இந்த தொடரிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக சில ஆர்டிஸ்ட்கள் விலக ஆரம்பித்து விட்டார்கள். இதனால் இன்னும் இதை ஓட்ட முடியாது என்பதற்காக கிளைமேக்ஸ் காட்சியில் ஒரு ஹைப்பை ஏற்படுத்தி சென்டிமென்ட் காட்சியை கொண்டு வர வேண்டும் என்பதற்காக இந்த நாடகத்தில் பில்லர் ஆக இருந்த ராமமூர்த்தி என்கிற தாத்தாவை சாய்த்து விட்டார்கள்.
அந்த வகையில் இவருடைய உயிர் பிரிந்த இந்த தருணத்தில் மொத்த குடும்பமும் அதிர்ச்சியில் சோகமாகி விட்டார்கள். இந்த விஷயத்தை கேள்விப்பட்ட கோபி மற்றும் ராதிகாவும் சடங்கு சம்பிரதத்தை செய்வதற்காக பாக்கியா வீட்டிற்கு வருகிறார்கள். ஆனால் ஈஸ்வரி இதற்கு மறுப்பு தெரிவித்து பேரன்களை வைத்து மேற்கொண்டு சடங்குகளை செய்யப் போகிறார்.
இப்பொழுது தான் கோபிக்கு நம் எந்த அளவிற்கு ஒரு தவறு செய்திருக்கிறோம் என்பது கொஞ்சம் புரிய வந்திருக்கிறது. அதாவது அப்பாவின் இரங்கலை கூட தன்னை செய்ய விடாமல் தடுக்கும் அம்மா நமக்கு மிகப்பெரிய தண்டனை கொடுத்து இருக்கிறார்கள் என்றால் அந்த அளவிற்கு நான் தவறுகள் செய்திருக்கிறேன் என்பது போல் கோபி உணரப் போகிறார்.
ஆனாலும் கோபியை யாரும் மன்னிக்க தயாராக இல்லாததால் பாக்யா மட்டும் கோபிக்கு அட்வைஸ் கொடுக்கும் விதமாக உங்களை நம்பி வந்த ராதிகாவை கண்கலங்காம பார்த்துக் கொள்ளுங்கள் என்று தியாகி மாதிரி சொல்லப் போகிறார்.
இதனை தொடர்ந்து இந்த நாடகத்திலிருந்து வெளியேறிய ராமமூர்த்தி சமீபத்தில் கொடுத்த பேட்டியில்
“பாக்கியலட்சுமி சீரியலின் டைரக்டர் வந்து, சீரியல் கிட்டத்தட்ட 1200 எபிசோடு தாண்டியாச்சு. அதனால ஒரு ஹைப் ஏற்றும் விதமாக ஒரு விஷயத்தை செய்யலாம் என்று முடிவு பண்ணி இருக்கிறோம் என்று கூறி இருக்கிறார்கள். அப்பொழுது ராமமூர்த்திக்கு தோன்றி விட்டது நம்மளை போட்டு தள்ளப் போகிறார்கள் என்று.
உடனே சிரித்துக் கொண்டே என்ன என் கதை முடிக்க போகிறீர்களா என்று கேட்டிருக்கிறார். ஆமாம் சார் கிளைமேக்ஸ் என்பதால் கொஞ்சம் சென்டிமென்ட்காக இந்த விஷயத்தை பண்ணி தான் ஆக வேண்டும் என்று கேட்டிருக்கிறார்கள். அதற்கு கொஞ்சம் கூட தயங்காமல் சீரியலுக்கு அது தான் தேவை என்றால் அப்படியே நடக்கட்டும் என்று கூறியிருக்கிறார்.
அதற்கு டைரக்டர், இல்ல சார் இறந்த பிறகு சடங்கு சம்பிரதாயங்கள் எல்லாம் கொஞ்சம் உண்மை மாதிரி எடுப்பதற்கு உங்களுடைய சம்மதம் வேண்டும் என்று கேட்டிருக்கிறார். உடனே ராமமூர்த்தி என்ன பண்ணனுமோ அதை தாராளமா பண்ணிக்கோங்க என்று சொல்லி அதன் பிறகு இந்த காட்சியை கொண்டு வந்திருக்கிறார்கள்.
இதனை தொடர்ந்து இந்த நாடகத்தை முடித்துவிட்டு அடுத்த புது நாடகம் காத்துக் கொண்டிருப்பதால் இன்னும் ஒரு சில நாட்களில் பாக்கியலட்சுமிக்கு சுபம் போட போகிறார்கள்.