எடுத்தது 5 படம் தான்.. ஆனா சொத்து மதிப்பு எவ்வளவு தெரிமா?
மொத்தம் ஐந்து படங்கள் மட்டுமே இயக்கியிருக்கும் லோகேஷ் கனகராஜின் சொத்து மதிப்பு குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது.
தமிழ் சினிமாவின் மோஸ்ட் வாண்டட் இயக்குநர் இப்போதைக்கு லோகேஷ் கனகராஜ்தான். மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் என அவர் இயக்கிய முதல் நான்கு படங்களும் சூப்பர் டூப்பர் ஹிட்டாகின. அவரது இயக்கத்தில் கடைசியாக லியோ திரைப்படம் வெளியானது.
மிகப்பெரிய எதிர்பார்ப்போடு வெளியான லியோ விஜய் ரசிகர்களை திருப்திப்படுத்தினாலும் பொதுவான ரசிகர்களை திருப்திப்படுத்த தவறியது.
லியோ திரைப்படத்தை முடித்திருக்கும் லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக ரஜினிகாந்த்தை வைத்து தலைவர் 171 படத்தை இயக்குகிறார்.
இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. மார்ச் அல்லது ஏப்ரலில் ஷூட்டிங் ஆரம்பமாகும் என லோகேஷே தெரிவித்திருக்கிறார். லியோ படத்தில் சந்தித்த விமர்சனங்களை கண்டிப்பாக தலைவர் 171ல் சரி செய்வார் என்று நம்பப்படுகிறது.
லோகேஷ் கனகராஜின் மிகப்பெரிய பலங்களில் ஒன்று அவரது மேக்கிங்கும் திரைக்கதையும். தான் திறமை வாய்ந்த கலைஞர் என்பதை தன்னுடைய முதல் படமான மாநகரத்திலேயே தன்னுடைய மேக்கிங் மூலம் நிரூபித்திருப்பார்.
அடுத்ததாக கமல் ஹாசனை வைத்து இயக்கியிருந்த விக்ரம் படத்தில் எல்சியூவை உருவாக்கி திரைக்கதையில் மேஜிக் நிகழ்த்தியிருப்பார்.
அந்த வகையில், தமிழ் சினிமாவிலேயே அதிகம் சம்பளம் வாங்கும் இயக்குநர்களில் இப்போது லோகேஷ் கனகராஜ்தான் டாப் என்ற ஒரு பேச்சும் கோலிவுட்டில் கடந்த சில மாதங்களாகவே ஓடிக்கொண்டிருக்கிறது.
இந்நிலையில் 5 படங்கள் மட்டுமே இயக்கியிருக்கும் லோகேஷ் கனகராஜின் சொத்து மட்டுமே 40 கோடி ரூபாய்வரை இருக்கலாம் என கூறப்படுகிறது.
மேலும் அடுத்து ரஜினியை வைத்து இயக்கப்போகும் படத்துக்கு 40 கோடி ரூபாய்வரை சம்பளமாக வாங்க அவர் முடிவெடுத்திருப்பதாகவும் அதற்கு சன் பிக்சர்ஸ் ஒத்துக்கொண்டது என்று ஒரு தகவல் ஓடியதும் நினைவுகூரத்தக்கது.