டோலிவுட் சூப்பர் ஸ்டாரின் மனைவி கர்ப்பம்!! 10 ஆண்டுகளுக்கு முன்பு கருமுட்டைகளை உறைய வைத்த உண்மை வெளியானது…

டோலிவுட் சூப்பர் ஸ்டாரின் மனைவி கர்ப்பம்!! 10 ஆண்டுகளுக்கு முன்பு கருமுட்டைகளை உறைய வைத்த உண்மை வெளியானது…
  • PublishedMay 16, 2023

2012இல் திருமணம் செய்து கொண்ட டோலிவுட் சூப்பர் ஸ்டார் ராம் சரண் மற்றும் அவரது மனைவி உபாசனா தம்பதியினர் குழந்தை பெற்றுக்கொள்வது குறித்து தற்போது செய்திகள் வெளியாகி உள்ளன.

ராம் சரணுடன் திருமணம் ஆன புதிதில் பலவித விமர்சனங்களை எதிர்கொண்டார் உபாசனா. மகதீரா படத்தின் ரிலீஸிற்கு பிறகு ராம் சரண் புகழின் உச்சியில் இருந்த காலம் அது.

அவரை திருமணம் செய்து கொண்ட உபாசனா கொஞ்சம் கூட அவருக்கு பொருத்தமானவராக இல்லை என பலரும் தங்களது வாய்க்கு வந்தவாறு பேசினர்.

திருமணம் ஆகி பல வருடங்கள் ஆகியும் இவர்களுக்கு இன்னும் குழந்தை இல்லை என்ற பிற்போக்குத்தனமாக விமர்சனங்களையும் இவர்கள் சந்தித்தனர்.

இந்த நிலையில், உபாசனா கர்பமாக இருப்பதாக அவரது குடும்பத்தினர் தங்களது சமூக வலைதள பக்கங்களில் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர். சமீபத்தில்தான் உபாசனாவிற்கு வளைகாப்பு வைபோகமும் நடைப்பெற்றது.

உபாசனா, சமீபத்தில் ஒரு ஊடகத்திற்கு பேட்டி அளித்திருந்தார். அதில், அவரது தாமதமான கர்பம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர்,

திருமணமான புதிதிலேயே குழந்தை மற்றும் வாழ்க்கையில் தாங்கள் சாதிக்க வேண்டிய பல விஷயங்கள் குறித்து பேசியதாக கூறினார்.

“நாங்கள் இருவரும் தொழில் ரீதியாக எங்களுக்கு வேண்டிய இடத்தை பிடித்த பிறகே குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என முடிவு செய்தோம். அதைத்தான் இப்போதும் செய்திருக்கிறோம். நான் தாயாக வேண்டும் என முடிவு செய்ததில் மிகவும் பெருமையடைகிறேன்” இவ்வாறாக தனது பேட்டியில் கூறியுள்ளார் உபாசனா. மேலும், எங்களது குழந்தைக்கு தேவையான வாழ்க்கையை நாங்கள் தர வேண்டும் என நினைத்ததால் தான் தாமதமாக தாயாக முடிவு செய்ததாக தெரிவித்துள்ளார் உபாசனா.

உலக அன்னையர் தினத்தை முன்னிட்டு உபாசனாவும் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில், “எல்லா சரியான காரணங்களுக்காகவும் தாய்மையை ஏற்றுக்கொண்டதில் நான் பெருமைப்படுகிறேன்” எனக்கூறியுள்ளார். மேலும், “எனது குழந்தைக்கு முழுமையான அன்பு மற்றும் பாசத்தை அளிக்க நான் உணர்வு பூர்வமாக தயாரான பிறகே குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என நினைத்தேன். அதையே செய்திருக்கிறேன். எனது முதல் அன்னையர் தினத்தை கொண்டாடுகிறேன்” என நெகிழ்ச்சியான பதிவை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார் உபாசனா.

உபாசனா கர்பமாக இருக்கிறார் என்ற அறிவிப்பு கடந்த ஆண்டு டிசம்பர் மாத்தில் வெளியானது. இதையடுத்து, உபாசனா சமீபத்தில் ஒரு நேர்காணலில் கலந்து கொண்டிருந்தார். அதில் நடிகர் ராம் சரண் நல்ல தந்தையாக இப்போதிலிருந்தே நடந்து கொண்டு வருவதாகவும் ஜூலை மாதத்தில் குழந்தை பிறக்க வாய்ப்பு உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

எங்கள் திருமணத்திற்குப் பத்து ஆண்டுகளுக்குப் பிறகு, நாங்கள் இப்போது ஒரு குழந்தையைப் பெற முடிவு செய்துள்ளோம்.

உபாசனாவும் ராம் சரணும் திருமணத்தின் ஆரம்பத்தில் தனது முட்டைகளை உறைய வைக்கவும், சேமிக்கவும் முடிவு செய்திருந்தனர். பத்து ஆண்டுகளுக்கு முன்பு அவ்வாறு செய்ததாகவும் உபாசனா தற்போது வெளிப்படுத்தியுள்ளார். அந்த முடிவுதான் அவர்களுக்கு இப்போது குழந்தை வேண்டும் என்ற கனவை நனவாக்கியது.

உபாசனா புகழ்பெற்ற அப்பல்லோ மருத்துவமனை குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

உபாசனா தனது எட்டு மாத குழந்தைப் பிறப்பை வெளிப்படுத்தும் படத்தைப் பகிர்ந்துகொண்டு இதை வெளிப்படுத்தியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *