உள்ளாடை இல்லாமல் நெக்லஸுடன் வலம் வந்த டாப்ஸி.. வாயடைத்து நின்ற ரசிகர்கள்!
- PublishedMarch 12, 2023
நடிகை டாப்ஸி பன்னு பேஷன் ஷோவில் உள்ளாடை அணியால் வெறும் நகையை அணிந்து கொண்டு கவர்ச்சியாக வலம் வந்தார். தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல்வேறு மொழி படங்களில் நடித்து வருகிறார்.
டாப்ஸி,கடைசியாக Blurr என்ற படத்தில் நடித்திருந்தார். திரையரங்கில் வெளியான இந்த படத்திற்கு நல்ல பெயர் கிடைத்தது.கிரைம் ,த்ரில்லர் பாணியில் வெளியாக திரைப்படத்தில் டாப்ஸி பார்வையற்ற பெண்ணாக நடித்திருந்தார்.
பஞ்சாப்பை சேர்ந்த டாப்ஸி தெலுங்கு மொழியில் 2010ஆம் ஆண்டு வெளியான ஜுமாண்டி நாடம் படத்தின் மூலம் சினிமாவுக்கு என்ட்ரி கொடுத்தவர். பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் டாப்ஸி பல படங்களில் டாப் நடிகர்களுடன் நடித்து வருகிறார். மற்ற மொழிகளை காட்டிலும் பாலிவுட்டில் தான் அதிக படங்களில் நடித்துள்ளார்.
டாப்ஸி நடித்த மிஷன் மங்கள்,சாந்த் கி ஆன்க், தப்பத், ஹசீன் தில்ருபா, போன்ற திரைப்படங்கள் நல்ல விமர்சனங்களை பெற்றன. டாப்ஸி இந்தியில் சபாஷ் மித்து என்ற படத்தில் நடித்திருந்தார். கிரிக்கெட் வீராங்கனை மிதாலி ராஜின் வாழ்க்கையை தழுவி எடுக்கப்பட்ட திரைப்படம் ‘சபாஷ் மிது’ திரைப்படத்தில் மிதாலி ராஜ் கதாபாத்திரத்தில் டாப்ஸி நடித்திருந்தார்.
நடிகை டாப்ஸி தற்போது தமிழில் ஜன கண மன படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடித்துள்ளார். Woh Ladki Hai Kahaan, Dunki, Phir Aayi Haseen Dillruba போன்ற இந்தி திரைப்படங்களை கைவசம் வைத்துக்கொண்டு பிஸியாக நடித்து வருகிறார். தெலுங்கில் அறிமுகமான டாப்ஸி, பாலிவுட், கோலிவுட் என அனைத்திலும் மிரட்டி வருகிறார்.
இந்நிலையில்,நடிகை டாப்ஸி பன்னு, மும்பையில் நடைபெற்ற ஃபேஷன் டிசைன் கவுன்சில் ஆஃப் இந்தியா உடன் இணைந்து நடந்து வரும் Lakme Fashion Week கலந்து கொண்டார். அதில், அதியா ஷெட்டி, பரினீதி சோப்ரா, டாப்ஸி பன்னு மற்றும் ராஷ்மிகா மந்தனா போன்ற நட்சத்திரங்கள் கலந்து கொண்டனர். இந்த பேஷன் ஷோவில் நடிகை டாப்ஸி, டிசைனர் மோனிஷா ஜெய்சிங்கின் வடிவமைத்த சிவப்பு நிற உடை அணிந்து கொண்டு, உள்ளாடை எதுவும் அணியாமல், பெரிய நெக்லசை அணிந்து கொண்டு வலம் வந்தார். அவர்களின் வளைவு நடையைப் பார்த்த ரசிகர்கள் வாயடைத்துப் போனார்கள். இணையத்தில் இந்த போட்டோ டிரெண்டாகி வருகிறது