ஆண் நண்பருடன் செல்லும் போது விபத்து? சர்ச்சைகளுக்கு திடீர் விளக்கம் கொடுத்த எதிர்நீச்சல் நாயகி

ஆண் நண்பருடன் செல்லும் போது விபத்து? சர்ச்சைகளுக்கு திடீர் விளக்கம் கொடுத்த எதிர்நீச்சல் நாயகி
  • PublishedFebruary 28, 2024

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் ஜனனி கேரக்டரில் நடிகை மதுமிதா நடித்து வருகிறார். இவர் சமீபத்தில் காரில் போகும்போது விபத்து ஏற்படுத்தியதாக இணையத்தில் ஒரு செய்தி பரவி வருகிறது.

இந்த நிலையில் அதை மறுப்பு தெரிவித்து மதுமிதா போஸ்ட் ஒன்று போட்டு இருக்கிறார்.

சோழிங்கநல்லூர் பகுதியில் இவரும் இவருடைய ஆண் நண்பரும் காரில் வேகமாக சென்று கொண்டிருந்ததாகவும் அப்போது எதிரே வந்த போலீஸ்காரரின் வாகனத்தில் பைக்கில் இவருடைய கார் மோதியதால் போலீஸ்காரருக்கு அடிபட்டு விட்டதாகவும் உடனே அவரை மருத்துவமனையில் சேர்த்து இருப்பதாகவும் மதுமிதா மற்றும் அவருடைய நண்பரை போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துக்கொண்டு போனதாகவும் அதில் கூறப்பட்டது.

இந்த நிலையில் மதுமிதா நேற்று தன்னுடைய இன்ஸ்டாகிராம் ஸ்டோரில் இதற்கு விளக்கம் கொடுத்து இருக்கிறார். அதில்,

“நண்பர்களே என்னை பற்றி சமீபத்தில் ஒரு வதந்தியான செய்தி பரவி வருகிறது. அது எல்லாம் உண்மையே கிடையாது. நான் நலமாக இருக்கிறேன். தவறான செய்திகளை நம்பாதீர்கள்” என்று அதில் கூறியிருக்கிறார். அதோடு அவர் நகைக்கடை ஒன்றில் கெஸ்ட் ஆக போயிருக்கும் வீடியோவையும் அந்த ஸ்டோரியில் பகிர்ந்து பகிர்ந்து இருக்கிறார்.

அதுபோல நகைக்கடையில் இவர் போட்டோ சூட் செய்வதையும் அதற்கு அடுத்த ஸ்டோரியில் மதுமிதா பகிர்ந்து இருக்கும் நிலையில் எல்லாமே வதந்தி தான் நான் நலமாக என்னுடைய வேலையை கவனித்துக் கொண்டிருக்கிறேன் என்று இவர் சொல்லாமல் சொல்லிக் கொண்டிருக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *