மூன்று தடவை பிக் பாஸ் வீட்டிற்குள் போய் திருந்தாத சாச்சனா..

மூன்று தடவை பிக் பாஸ் வீட்டிற்குள் போய் திருந்தாத சாச்சனா..
  • PublishedJanuary 9, 2025

இந்த வருடம் ஆரம்பித்த பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி வெற்றிகரமாக முடிவுக்கு வர ஆரம்பித்து விட்டது. இன்னும் பத்து நாட்கள் தான் இருக்கிறது. ஆனால் எட்டு போட்டியாளர்கள் உள்ளே இருப்பதால் யார் டைட்டில் வின்னர் ஆகப் போகிறார் என்று எதிர்பார்ப்பு அதிகமாகவே இருந்து வருகிறது.

அத்துடன் பணப்பெட்டியை எந்த போட்டியாளர் எடுக்க வாய்ப்பு இருக்கிறது என்ற சில விவாதமும் போய்க் கொண்டிருக்கிறது.

அந்த வகையில் தீபக் மற்றும் அருண், இவர்களில் யாராவது ஒருவர் பணப்பெட்டியை எடுக்க வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாயிருக்கிறது.

மேலும் எலிமினேட் ஆகிப்போன போட்டியாளர்களில் எட்டு பேர் மறுபடியும் உள்ளே போயிருக்கிறார்கள். அந்த வகையில் அவர்கள் வெளியே நடந்த விஷயத்தையும், அவர்கள் புரிந்து கொண்ட சில விஷயங்களையும் எதிர்மறையாக போட்டியாளர்களுக்கு தெரிவித்து வருகிறார்கள்.

இதில் சாச்சனா சொன்னது தான் கொஞ்சம் முரண்பாடாக இருப்பது போல் தெரிகிறது. அதாவது விஷாலிடம் முக்கோண காதலை சொல்லி கேட்ட கேள்வி எல்லாம் சரியாக இருந்த நிலையில் முத்துக்குமார் மற்றும் ஜாக்லின்னை தவறாக சித்தரிப்பது போல் இருந்தது.

அதாவது வெளியே இருந்து பார்ப்பதற்கு இவர்கள் இருவரும் காதலிப்பதாகவும், முத்துக்குமாரிடம் அடிக்கடி ஜாக்லின் போய் பேசுவதும், உங்களை நான் யாரையும் காதலிக்க விட மாட்டேன் என்று சொன்ன விஷயத்தையும் ஹைலைட் பண்ணி காட்டி ஜாக்குலினை நோகடித்து விட்டார்.

அத்துடன் இந்த விஷயங்களெல்லாம் வெளியே பேசும் பொருளாக மாறிவிட்டதாகவும் சாச்சனா கூறியிருக்கிறார். இதை கொஞ்சம் கூட எதிர்பார்க்காத ஜாக்லின், தீபக்கிடம் கண்ணீர் விட்டு புலம்புகிறார். அதாவது என்னைப் பற்றி எனக்கு தெரியும் முத்துக்குமாரனும் அப்படி கிடையாது. அவர் என்னைவிட மூன்று வயசு சின்னவர், எனக்கு ஒரு தம்பி போல தான் முத்துக்குமார்.

வெளியே இந்த பொண்ணு பார்த்துட்டு வந்தாலும் வீட்டிற்குள் இப்படி சொல்வது சரியே இல்லை. இன்னும் அந்த பொண்ணுக்கு மெச்சூரிட்டியே இல்லை என்று ஜாக்லின், தீபக்கிடம் புலம்பி இருக்கிறார்.

அதற்கேற்ற மாதிரி சாச்சினா பேசியது சரியே இல்லை என்பதற்கு ஏற்ப மூன்று தடவை பிக் பாஸ் வீட்டிற்குள் போய் இன்னும் திருந்தாமல் இருக்கிறார். இவர் வெளியே போனது நல்லது தான் என்று மக்களும் சாச்சனாவுக்கு எதிராக கமெண்ட்ஸ் பண்ணி வருகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *