நடிகை சமந்தா மிகப்பெரிய படங்களுடன் மாஸ் கம் பேக்

நடிகை சமந்தா மிகப்பெரிய படங்களுடன் மாஸ் கம் பேக்
  • PublishedApril 14, 2025

நடிகை சமந்தா கடந்த சில ஆண்டுகளுக்கு முன் மயோசிட்டிஸ் நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இதனால் சினிமாவிலிருந்து விலகி இருந்தார்.

இதன்பின் இவர் நடிப்பில் சிட்டாடல் எனும் வெப் சீரிஸ் வெளிவந்தது. இதில் ஆக்ஷன் ஹீரோயினாக கலக்கி இருந்தார். ஆனால், படங்கள் நடித்து சில ஆண்டுகள் ஆகிவிட்டன. இதனால் சமந்தாவின் மார்க்கெட் சரிய துவங்கிவிட்டது என பேசி வந்தனர்.

இந்த நிலையில், புஷ்பா பட இயக்குநர் சுகுமார் இயக்கத்தில் ராம் சரண் நடிப்பில் புதிய படம் உருவாகவுள்ளது. இப்படத்தின் பட்ஜெட் ரூ. 700 கோடி என கூறப்படுகிறது. இப்படத்தில் சமந்தா தான் கதாநாயகியாக நடிக்கிறாராம்.

மேலும் அட்லீ – அல்லு அர்ஜுன் கூட்டணியில் ரூ. 600 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்ட படம் உருவாகி வருகிறது. இப்படத்திலும் சமந்தா தான் கதாநாயகியாக நடிக்கப்போகிறார் என தகவல் கூறுகின்றனர். இதன்மூலம் ரூ. 1300 கோடி பட்ஜெட் படங்களை கைவசம் சமந்தா வைத்துள்ளார்.

விரைவில் இந்த படங்களுக்கான அறிவிப்பு வெளிவரும்போது, சமந்தா மாஸ் கம் பேக் கொடுப்பார் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *