படத்தின் ரிலீஸ் திகதியை தள்ளிவைத்த ஜவான் படக்குழு : இதுதான் காரணமா?

படத்தின் ரிலீஸ் திகதியை தள்ளிவைத்த ஜவான் படக்குழு : இதுதான் காரணமா?
  • PublishedMarch 16, 2023

‘ராஜா ராணி’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு இயக்குனராக அறிமுகமானவர் அட்லீ, அதன் பின்னர் விஜய்யை வைத்து தெறி, மெர்சல், பிகில் என அடுத்தடுத்து ஹிட் படங்களை கொடுத்திருந்தார்.

தற்போது இவர் ஷாருக்கான் நடிக்கும் ஜவான் திரைப்படத்தை இயக்கி வருகிறார். பான் இந்தியா படமாக உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது.

படத்தினை ஜுன் மாதம் வெளியாகும் என அறிவித்திருந்த நிலையில், தற்போது வெளியீட்டு திகதியை தள்ளிவைத்துள்ளார்கள். மேலும் இந்த படத்தின் பிரபல பொலிவுட் நடிகரான சஞ்சய் தத் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தற்போது அவர் லியோ திரைப்படத்தில் நடித்து வருவதால், ஜவான் திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் தாமதமாகி வருவதாக கூறப்படுகிறது.

இதனால் படத்தின் வெளியீட்டு திகதியை ஒக்டோபர் மாதத்திற்கு தள்ளிவைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *