மீண்டும் புதிய படத்தை இயக்கும் பாராதிராஜா!

மீண்டும் புதிய படத்தை இயக்கும் பாராதிராஜா!
  • PublishedMarch 16, 2023

தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனரான பாரதிராஜா, தற்போது நடிப்பிலும் கவனம் செலுத்தி வருகிறார்.

அண்மையில் தனு{டன் இணைந்து நடித்து சமீபத்தில் வெளியான திருசிற்றம்பலம் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. அதேபோல் தற்போது கருமேகங்கள் கலைவதில்லை திரைப்படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இதனிடையே பாரதிராஜா மீண்டும் படம் இயக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. அதாவது, இவர் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொண்ட கதையை இயக்கி, நடிக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

தேனி பின்னணியில் உருவாகும் இந்தப் படத்துக்கு ‘தாய்மெய்’ என்று தலைப்பு வைத்துள்ளதாகவும், இதுபற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *