கமல்ஹாசனுக்கு வலது கையாக செயற்படும் நம்பிக்கைக்குரிய நபர்!

கமல்ஹாசனுக்கு வலது கையாக செயற்படும் நம்பிக்கைக்குரிய நபர்!
  • PublishedMarch 14, 2023

உலக நாயகன் கமல்ஹாசன் தற்போது பட தயாரிப்பு பணிகளில் தீவிரமாக இறங்கியுள்ளார்.  இதற்கு  பின்னால் அவருக்கு நம்பிக்கையான ஒரு மனிதர் இருக்கிறாராம்.

இந்த தயாரிப்பு நிறுவனத்தை ஹாசன் சகோதரர்கள் அதாவது கமல் தன் அண்ணன்களுடன் இணைந்து தான் ஆரம்பித்தார். ஆனால் தற்போது அதன் பொறுப்பு முழுவதையும் கமல் தான் கவனித்துக் கொள்கிறார்.

ஏனென்றால் அவருடைய மூத்த அண்ணன் சாருஹாசன் தற்போது வயது மூப்பின் காரணமாக ஓய்வில் இருக்கிறார். அதேபோன்று அவருடைய மற்றொரு அண்ணன் சந்திரகாசனும் சில வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார்.

இதனால் தற்போது கமல் அந்த இடத்திற்கு தனக்கு மிகவும் நம்பிக்கையான நபராக இருக்கும் மகேந்திரனை நியமித்துள்ளார்.  இவர் தான் ராஜ்கமல் நிறுவனத்தின் பொறுப்புகளை கவனித்து வருகிறார். அது மட்டுமல்லாமல் உலகநாயகனுக்கு வலது கரமாகவும் இருக்கிறார்.

அதனால் இவர் எடுக்கும் முடிவுகளை கமலும் அங்கீகரித்து வருகிறார். மேலும் மகேந்திரன் தான் சிம்புவை வைத்து படம் இயக்க வேண்டும் என்றும் கூறினாராம். இது தவிர இன்னும் சில முன்னணி நடிகர்களிடமும் அவர் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கிறார். அந்த வகையில் தற்போது அண்ணனுக்கு அடுத்தபடியாக கமல் நம்பும் ஒருவராக இவர் மாறி இருக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *