மணிரத்தினத்துடன் கமல் – சிம்பு கூட்டணி!! உச்சகட்ட மகிழ்ச்சியில் ரசிகர்கள்.. படம் வேற லெவல்தான்

மணிரத்தினத்துடன் கமல் – சிம்பு கூட்டணி!! உச்சகட்ட மகிழ்ச்சியில் ரசிகர்கள்.. படம் வேற லெவல்தான்
  • PublishedMay 10, 2023

கமல் இந்தியன் 2 படபிடிப்பை முடித்த கையோடு அடுத்த படத்தில் மணிரத்தினத்துடன் கூட்டணி வைக்கப் போகிறார். இதில் மிகப்பெரிய பிரமாண்டமான அளவில் உருவாக்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.

அத்துடன் இப்படம் மல்டி ஸ்டார் படமாக உருவாக இருக்கிறது. அதனால் கமலுடன் சேர்ந்து இரண்டு மூன்று கதாநாயகர்களை சேர்த்து நடிக்க வைக்க வேண்டும் என்று திட்டமிட்டு வைத்திருக்கிறார்கள்.

இதில் தற்போது சிம்பு நடிக்க போவதாக உறுதியாக இருக்கிறது. இதற்கான பேச்சுவார்த்தைகள் ஏற்கனவே சிம்புவிடம் நடைபெற்று விட்டது.

அதனால் தான் பொன்னியின் செல்வன் 2 விழாவிற்கு கூட சிம்பு பங்கேற்றிருக்கிறார். இவரைத் தொடர்ந்து இன்னும் இரண்டு முன்னணி நடிகர்களிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

அத்துடன் கமல் மற்றும் மணிரத்தினம் இவர்கள் இருவரும் சேர்ந்தாலே அந்த படம் ஹிட் ஆகும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.

மேலும் சிம்பு முன்மாதிரி சில்மிஷம் எதுவும் செய்யாமல் படத்தில் நடிப்பதற்கு அதிக கவனம் எடுத்து நிறைய படங்களில் கமிட் ஆகி இருக்கிறார். இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த பத்து தல படம் இவருக்கு வெற்றி படமாக தான் அமைந்தது.

இதனை அடுத்து கமல் தயாரிப்பில் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் ஹிஸ்டாரிக்கல் ஸ்டோரி படத்தில் நடிக்க இருக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *