அஜித் திரைப்படத்தின் புதிய அப்டேட் : வலிமைப் படம்போல் இல்லாமல் இருந்தால் சரி !

அஜித் திரைப்படத்தின் புதிய அப்டேட் : வலிமைப் படம்போல் இல்லாமல் இருந்தால் சரி !
  • PublishedMay 11, 2023

நடிகர் அஜித்திற்கு துணிவு திரைப்படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது.  இந்த வெற்றியை அப்படியே தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்பது அஜித் ரசிகர்களின் மிகப்பெரிய கனவாகவும் இருக்கிறது.

ஆனால் அவருடைய 62 ஆவது படம் கடந்த வருடத்தில் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இன்றுவரை இழுபறியாக இருக்கிறது.

படத்தின் இயக்குனர் யார் என்பது முடிவாவதற்கு பல மாதங்கள் இழுத்தடித்து விட்டது தயாரிப்பு நிறுவனம். அதன் பின்னர் இயக்குனர் மகிழ்திருமேனி தான் இயக்கப் போவதாக உறுதியான அறிவிப்பு வெளியானது.

சமீபத்தில் நடிகர் அஜித்குமாரின் பிறந்த நாளையொட்டி அன்றைய நள்ளிரவு 12 மணிக்கு படத்தின் தலைப்பு விடாமுயற்சி என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. இதுவே அஜித் ரசிகர்களுக்கு கொண்டாட்டமாக அமைந்துவிட்டது.

இருந்தாலும் படத்தில் யார்,  யார் நடிக்க இருக்கிறார்கள்,  அஜித்துக்கு கதாநாயகி யார் என்பது இன்றுவரை உறுதியாகவில்லை. இந்நிலையில், தற்போது விடாமுயற்சி திரைப்படம் குறித்த சில தகவல்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகின்றன.

இதன்படி அஜித் குமார் இந்த படத்தில் நடித்து முடித்த பிறகு தான் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார் . இந்த படத்தை மொத்தம் 70 நாட்களில் எடுத்து முடிக்க பட குழு திட்டமிட்டு இருக்கிறது. இந்த 70 நாட்களில் நடிகர் அஜித்குமாரின் மொத்த கால்ஷீட் 40 நாட்கள் தானாம். விடாமுயற்சி படப்பிடிப்பானது இந்த மாதிரி இறுதியில் ஆரம்பமாக இருப்பதாக கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *