பெண்களிடம் யோகி மாதிரி நடந்துக்கொள்ளும் ரஜினி : உண்மையை உடைத்த சுஹாசினி!

பெண்களிடம் யோகி மாதிரி நடந்துக்கொள்ளும் ரஜினி : உண்மையை உடைத்த சுஹாசினி!
  • PublishedMay 11, 2023

இன்றைக்கும் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் ஹீரோக்களுக்கு டஃப் கொடுக்கும் விதமாக பல படங்களில் நடித்து வருகிறார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பற்றிய சில சுவாரஸ்ய விடயங்களை நடிகை சுஹாசினி தெரிவித்துள்ளார்.

அதாவது,  ஆரம்ப காலத்தில் வில்லனாக உருவெடுத்து அதன் பின் பல படங்களில் ஹீரோவாக நடித்தவர் தான் ரஜினி. அவ்வாறு இருப்பின் ராதா,  அம்பிகா,  குஷ்பூ,  ராதிகா, சுஹாசினி ஆகிய முக்கிய கதாநாயகிகளோடு நடிக்கும் வாய்ப்பு இருந்தது. இருப்பினும் இவர் யாருடனும் பேசமாட்டாராம்.

ரஜினி பெண்களிடம் அதிகமாக பேச மாட்டார். அவர் ஒரு ஞானி என்றும் பெண்களிடம் யோகி மாதிரி நடந்து கொள்வார் என்றும் கூறியுள்ளார்.

அவ்வாறு இருக்க அயன் லேடி என அழைக்கப்படும் ராதிகாவிடம் மற்றும் பேசி சிரிப்பார் என்ற உண்மையை உடைத்தார். இதைத்தொடர்ந்து ராதிகாவிடம் இதன் ரகசியத்தை கேட்டறிய கேள்வி முன் வைக்கப்பட்டது.

அதற்கு நானும் ரஜினியும் ஹிந்தி பட ஷூட்டிங்கிற்கு ஒன்றாக செல்வோம். மேலும் காலை 9 மணிக்கே மேக்கப் உடன் சென்று விடுவோம் ஆனால் ஷூட்டிங் 12 மணிக்கு தான் ஆரம்பமாகும். இந்த இடைப்பட்ட நேரங்களில் நானும் அவரும் பேசிக்கொள்வது வழக்கம் என ராதிகா தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *