கன்னட சூப்பர் ஸ்டாருக்கு புற்றுநோய்; அமெரிக்காவில் தீவிர சிகிச்சை

கன்னட சூப்பர் ஸ்டாருக்கு புற்றுநோய்; அமெரிக்காவில் தீவிர சிகிச்சை
  • PublishedDecember 5, 2024

மறைந்த பழம்பெறும் கன்னட நடிகரும், அரசியல்வாதியுமான டாக்டர் ராஜ்குமாரின் மகன் தான் சிவ ராஜ்குமார். 62 வயதாகும் இவர், சென்னையில் பிறந்து வளர்த்தவர்.

அதே போல் சென்னையில் உள்ள எம்ஜிஆர் கவர்மெண்ட் ஃபிலிம் அண்ட் டெலிவிஷன் ட்ரைனிங் இன்ஸ்டியூட்டில் சினிமா சம்பந்தமான படிப்பை படித்துவிட்டு, பின்னர் தெலுங்கு திரையுலகில் தன்னுடைய நடிப்பு பயணத்தை துவங்கினார்.

ஜெயிலர் திரைப்படத்தில், ரஜினிகாந்தின் நண்பராக நரசிம்மா என்கிற கதாபாத்திரத்தில் நடித்து கவனம் பெற்றார் சிவராஜ் குமார். அதே போல் தனுஷ் நடிப்பில் வெளியான கேப்டன் மில்லர் படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் தளபதி 69 ஆவது படத்திலும் சிவ ராஜ்குமார் நடிக்க கமிட் ஆகி இருக்கும் தகவல் வெளியானது.

திரை உலகில் பிஸியாக நடித்து வரும் சிவ ராஜ்குமாருக்கு தற்போது புற்றுநோய் பாதிப்பு இருப்பதாகவும், இதற்காக அவர் அமெரிக்கா சென்று சிகிச்சை பெற உள்ளதாகவும் வெளியாகி உள்ள தகவல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த தகவல் குறித்து, சிவ ராஜ்குமார் ஏற்கனவே கூறியபோது… “தனக்கு ஒரு நோய் இருப்பது உண்மைதான். அதற்காக அமெரிக்கா சென்று ஒரு மாதம் சிகிச்சை எடுக்க உள்ளதும் உண்மைதான். ஆனால் அது புற்றுநோய் அல்ல. அந்த நோய் குறித்து இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. அதனால் ரசிகர்கள் யாரும் பதட்டம் அடைய வேண்டாம். நான் நலமுடன் இந்தியா திரும்புவேன் என தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *