பிரபல காமெடி நடிகர் திடீரென காலமானார்… திரையுலகினர் அஞ்சலி
மலையாளத்தில் 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து புகழ் பெற்றவர் கலாபவன் ஹனீப். சினிமாவில் அறிமுகமான கலாபவன் ஹனீப், மல்லுவுட் வடிவேலுவாக காமெடியில் கலங்கடித்து வந்தார்.
இந்நிலையில், உடல்நிலை காரணமாக கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் கலாபவன் ஹனீப் உயிரிழந்தார். அவருக்கு வயது 63.
ஆரம்ப காலங்களில் மிமிக்ரி செய்து பிரபலமான இவர், பின்னர் மறைந்த நடிகர் கலாபவனின் கலைக் குழுவில் பயணித்து வந்தார். அதன்பிறகே இவரும் தனது பெயருக்கு முன்னால் ‘கலாபவன்’ என்பதை சேர்த்துக்கொண்டார்.
மம்முட்டி, மோகன்லால், ஜெயராம் என மலையாள டாப் ஹீரோக்களுடன் நடித்த கலாபவன் ஹனீப், காமெடியில் பின்னி பெடலெடுத்துவிடுவார். தமிழ் ரசிகர்களின் மீம்ஸ் மெட்டீரியலாக வடிவேலு இருப்பது போல, மலையாளத்தில் கலாபவன் ஹனீப் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் நுரையீரல் சம்பந்தமான பிரச்சினை காரணமாக சிகிச்சைப் பெற்று வந்தார் ஹனீப். எர்ணாகுளத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
அவரது இறுதிச்சடங்கு இன்று காலை 11 மணிக்கு கேரளாவின் மட்டஞ்சேரியில் நடக்கிறது. கலாபவன் ஹனீப் மறைவு செய்தியை அறிந்த மம்முட்டி, மோகன்லால், திலீப் உள்ளிட்ட பிரபலங்கள் அவருக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர். புழு, 2018, கருடன் ஆகியவை கலாபவன் ஹனீப் நடிப்பில் கடைசியாக சூப்பர் ஹிட்டான படங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.