ஓரினச்சேர்க்கையில் ஈடுபடும் மம்மூட்டி? பல நாடுகளில் தடை..

ஓரினச்சேர்க்கையில் ஈடுபடும் மம்மூட்டி? பல நாடுகளில் தடை..
  • PublishedNovember 22, 2023

‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’ படத்தின் மூலம் கவனம்பெற்ற இயக்குநர் ஜியோ பேபி, அடுத்ததாக நடிகர் மம்மூட்டி, நடிகை ஜோதிகா ஆகியோரை மையக் கதாபாத்திரமாக வைத்து ‘காதல் தி கோர்’ என்கிற படத்தை இயக்கியுள்ளார்.

மம்மூட்டி கம்பெனி தயாரிப்பில் உருவான இப்படம் வருகிற நவ.23 ஆம் தேதி வெளியாகிறது.

அரசு ஊழியராக இருந்து ஓய்வு பெற்ற ஜார்ஜ் (மம்மூட்டி) தன் மனைவி ஓமணா (ஜோதிகா) மற்றும் மகளுடன் வசித்து வருகிறார். ஒருநாள், தேவாலயத்திற்குச் சென்றுவிட்டு திரும்புகையில் ஊராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிட விண்ணப்பிக்கிறார்.

ஆனால், அடுத்த சில நாள்களில் அவருக்கு எதிராக அவர் மனைவி விவாகரத்துக் கோரி நீதிமன்றத்தை நாடுகிறார். விவாகரத்துக்குக் காரணமாக, ஜார்ஜ் கடந்த சில ஆண்டுகளாக தங்கன் என்பவருடன் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டு வருகிறார் எனக் குறிப்பிடுகிறார்.

இந்தக் குழப்பங்களிலிருந்து ஜார்ஜ் எப்படி மீள்கிறார், தன்பாலின உணர்வாளர்களின் குடும்பத்தினர் அவர்களை எப்படி எதிர்கொள்கின்றனர் என்கிற கேள்விகளுடன் உருவாகியிருக்கிறது காதல் – தி கோர்.

வித்தியாசமான கதைகளையும் கதாபாத்திரங்களையும் தேர்ந்தெடுத்து நடிக்கும் மம்மூட்டி, முதன் முறையாக தன்பாலின ஈர்ப்பாளராக நடித்திருப்பது உச்ச நட்சத்திரங்கள், ரசிகர்கள் உள்பட பலரிடமும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், ஓரினச்சேர்க்கையாளர்களை ஆதரிக்கும் வகையில் இப்படம் உருவாகியுள்ளதால் கத்தார், குவைத் மற்றும் அமீர நாடுகளில் இப்படத்திற்கு தடை விதித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *